சேது சமுத்திர திட்டத்தால் எந்த பயனும் இல்லை.. யாருக்கு பயன் தெரியுமா? திமுகவை அட்டாக் செய்த அண்ணாமலை

By Raghupati R  |  First Published Jan 13, 2023, 5:36 PM IST

சேது சமுத்திர திட்டத்தை தமிழகத்தில் செயல்பட பாஜக அனுமதிக்காது. - அண்ணாமலை பேட்டி.


150 ஆண்டுக்கால கனவுத் திட்டமான சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று கொண்டுவந்தார்.

அந்தத் தீர்மானத்தின் மீது பேசிய அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவு தெரிவித்தனர். அதையடுத்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், தென் மாவட்டத்தின் பொருளாதாரம் பல மடங்கு பெருகும், ஏராளமான வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க..Pongal 2023 : பொங்கல் தினத்துக்கு இத்தனை நாள் விடுமுறையா? கூடுதலாக 2 நாட்கள் லீவ் கிடைக்குமா?

காமராஜர், அண்ணா ஆகியோர் தமிழ்நாட்டின் முதல்வர்களாக இருந்த காலத்தில், சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று பேசியிருக்கிறார்கள். சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்பட்டால் கப்பல்களின் பயண நேரம் பெரும் அளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சேது சமுத்திர திட்டம் பற்றி கருத்து தெரிவித்துள்ளார் அண்ணாமலை. இன்று நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார் அண்ணாமலை. அப்போது பேசிய அவர், சேது சமுத்திரத் திட்டத்தால் பொருளாதார ரீதியில் இயங்கும் பெரிய கப்பல்களுக்கு லாபம் இருக்காது. ஒரு திட்டம் கொண்டு வந்தால் ஆண்டுக்கு 12 சதவீத வருமானம் தர வேண்டும்.

சேது சமுத்திரத் திட்டத்தால் வருமானம் இருக்காது. மீனவர்களுக்கும் இந்தத் திட்டத்தால் பயனில்லை. மத்திய அரசுடன் இணைந்து புதிதாக சேது சமுத்திரத் திட்டத்தை உருவாக்கினால் பாஜக ஆதரிக்கும்.சேது சமுத்திர திட்டத்தால் டி.ஆர்.பாலுவும், கனிமொழியும் மட்டும்தான் பயனடைவார்கள்’ என்று கூறினார்.

இதையும் படிங்க..வெளியானது புதிய ராயல் என்ஃபீல்டு - சூப்பர் மீடியர் 650யின் விலை எவ்வளவு தெரியுமா? முழு விபரம் இதோ!

இதையும் படிங்க..நாட்டு நாட்டு பாட்டுக்கு இவங்க ஆடியிருக்காங்களா.? ஆச்சர்யப்பட்ட ஆனந்த் மஹிந்திரா - வைரல் வீடியோ!

click me!