திமுகவுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையைப் புறக்கணித்தது விசிக... திமுக கூட்டணியில் குழப்பம்..!

Published : Mar 03, 2021, 10:58 PM IST
திமுகவுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையைப் புறக்கணித்தது விசிக... திமுக கூட்டணியில் குழப்பம்..!

சுருக்கம்

திமுகவுடனான இரண்டாம் கட்ட தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் பங்கேற்காமல் புறக்கணித்தது.  

திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உடன் மட்டும் தொகுதி உடன்பாடு முடிந்துள்ளது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, மதிமுக, விசிக ஆகிய கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தியபோதும் உடன்பாடு ஏற்படவில்லை. இந்தக் கட்சிகள் எதிர்பார்க்கும் தொகுதிகளைவிட மிகக் குறைவாகவே திமுக தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய முன்வந்ததால், இந்தக் கட்சிகள் அதிர்ச்சியடைந்துள்ளன.
ஏற்கனவே தொகுதி உடன்பாட்டில் ஏமாற்றமடைந்த காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, மதிமுக ஆகிய கட்சிகள் அவசர ஆலோசனை கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளன. இந்நிலையில் இன்று திமுகவுடன் நடைபெறவிருந்த இரண்டாம் கட்ட தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை விசிக புறக்கணித்தது. விசிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தலைமை எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருந்தார். இந்நிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்காதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி