அம்பேத்கர் சிலைக்கு காவியா.? தமிழ்நாடு முழுவதும் 12ம் தேதி ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் அறிவிப்பு !

By Raghupati R  |  First Published Dec 8, 2022, 3:31 PM IST

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக வரும் 12ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.


மதுரை பெருங்குடியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை திறப்பு விழாவிற்கு நாளை முதல்வர் வருவதை ஒட்டி மதுரைக்கு வந்தார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மதுரை விமானத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். 

Tap to resize

Latest Videos

undefined

அப்போது பேசிய அவர், ‘மதுரை பெருங்குடியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை திறப்பு விழாவிற்காக நாளை முதல்வர் வருகை தந்து , திறந்து வைக்க உள்ளார். சென்னையில் பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா போன்றவர்கள் பேரில் சூட்டப்பட்டு பயன்பாடு இல்லாமல் தான் உள்ளது. ஆகையால் பேரை பற்றி எந்தவித பிரச்சினையும் இல்லை. மேலும் மாநில அரசும் ஒன்றிய அரசும் இணைந்து தான் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

இதையும் படிங்க.. Gujarat Election Result 2022: மோடியின் சொந்த ஊர் தொகுதியைக் இந்த முறை கைப்பற்றுகிறது பாஜக: காங்கிரஸ் தோல்வி

ஆகையால் எத்தகைய பெயர் சூட்டினாலும் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. வருங்காலங்களில் பாஜக மதவாத சக்திக்கு எதிராக ஆம் ஆத்மி , காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி கொள்ள முடியும். சங்பரிவார் அமைப்புகள் மற்றும் அதன் துணை அமைப்புகளான இந்து மக்கள் கட்சி போன்றவை ஏற்கனவே பெரியார் சிலை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு காவி அணிவித்து சர்ச்சை ஏற்படுத்தி வருகின்றனர்.

தற்போது அம்பேத்கர் சிலைக்கும் காவிமயமாக்குதல், பட்டை அடித்து, விபூதி பூசுதல் போன்றவை செய்வதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக வரும் 12ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் மாநிலம் தழுவிய கண்டன ஆர்பாட்டம் நடைபெறும். சனாதான சக்திகளுக்கு எதிரான இந்த தாக்குதலை முறியடிக்க மதசார்பற்ற அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க.. இமாச்சலை தட்டி தூக்கிய காங்கிரஸ்.! பாஜக கையில் எடுத்த கடைசி அஸ்திரம் - ஆட்சி அமைப்பது யார் ?

click me!