மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் எரிச்சல் வார்த்தைகளுக்கு பதில் சொல்ல விருப்பமில்லை-இபிஎஸ்யை விளாசிய ஸ்டாலின்

By Ajmal KhanFirst Published Dec 8, 2022, 2:05 PM IST
Highlights

பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டுவிட்டதா நினைக்குமாம். அதுபோல எதிர்க்கட்சித் தலைவர் நினைத்துக் கொண்டு இருக்கிறார். இவர் வேண்டுமென்றால் கண்ணை மூடிக்கொண்டு இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டு மக்கள் 19 மாதத்துக்கு முன்பே விழித்துவிட்டார்கள். இருண்ட காலத்தை முடித்து வைத்து, உதயசூரியனின் காலத்தை உருவாக்கிவிட்டார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தென்காசியில் முதலமைச்சர் ஸ்டாலின்

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், தென்காசி மாவட்டத்துக்கு வந்ததுமே, இந்த மண்ணைப் போலவே மனதும் குளிர்ச்சி அடைந்து விடுகிறது. எப்போதும் லேசான தூறல் – சாரலாகப் பெய்து வருவதைப் பார்க்கும்போது - சென்னை போன்ற வெப்பமான நகரத்தில் இருந்து வரும் எனக்கு இது மிகவும் இதமாக இருக்கிறது.  இது என்ன அரசு விழாவா? அல்லது எங்கள் கட்சியினுடைய மாநில மாநாடா? என்று சந்தேகப்படக்கூடிய அளவிற்கு பெரிய எழுச்சி. மிகப்பெரிய அளவில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றால், அப்படி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கக்கூடிய இந்த நிகழ்ச்சியில், இங்கே வழங்கப்பட இருக்கக்கூடிய தொகையும் மிகப் பெரியதாக அமைந்திருக்கிறது.

திமுகவிற்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம்..! திடீர் என ஒத்திவைத்த எடப்பாடி..! என்ன காரணம் தெரியுமா..?

சிறுமியின் கோரிக்கையை நிறைவேற்றிய ஸ்டாலின்

வினைதீர்த்த நாடார்பட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளியில், 3-ஆம் வகுப்பு படிக்கக்கூடிய ஆராதனா எனும் குழந்தை, சமீபத்தில், எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அந்தக் கடிதத்தில், தான் படிக்கும் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டித்தர வேண்டும் என்று கேட்டிருந்தார். பாருங்கள் ஒரு குழந்தை எழுதியிருக்கிறது. அந்தக் கடிதத்தை படித்ததும் எனக்குப் பெருமையாக இருந்தது. எத்தகைய நம்பிக்கையை அவர் என் மீது வைத்திருந்தால் இந்தக் கடிதம் எழுதி இருப்பார் என நான் நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன். குழந்தை ஆராதனாவின் கோரிக்கை ஏற்கப்பட்டது என்பதை இந்தக் கூட்டத்தில் இப்போது நான் அறிவிக்கிறேன்.

அதற்கு முதற்கட்டமாக, 35 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் இரண்டு வகுப்பறைகள் கட்டப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வளவு சிறு வயதிலேயே நம்பிக்கையோடு எனக்குக் கடிதம் எழுதிய அந்த குழந்தை ஆராதனா, அதே பள்ளியில் படித்து எதிர்காலத்தில் சிறப்பான நிலையை அடைய வேண்டும் என்று மீண்டும் அந்த சிறுமியை, அந்த குழந்தையை நான் வாழ்த்துகிறேன். இந்த மாவட்ட மக்களினுடைய நீண்டநாள் கோரிக்கை, தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் வட்டம் மேலநீலித நல்லூர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு தனி அலுவலரை நியமித்த அரசு தான் தமிழக அரசு, தி.மு.க அரசு.  

நீங்கள் சொன்னதை செய்தாலே பெட்ரோல் டீசல் விலை தானாக குறையும்.. அமைச்சர் PTR விமர்சனத்திற்கு அண்ணாமலை பதிலடி.!

புலம்பும் இபிஎஸ்

இப்படி ஒவ்வொருவருடைய தேவைகளையும் கேட்டுக் கேட்டு- ஒவ்வொரு பகுதியின் பிரச்சினையையும் அறிந்து, அறிந்து நிறைவேற்றித் தரும் அரசாக நம்முடைய அரசு செயல்பட்டு வருகிறது. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள், “திமுக ஆட்சிக்கு வந்ததும் எந்த சாதனையையும் செய்யவில்லை - எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை” என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். சில மாதங்கள் வரைக்கும் என்ன சொன்னார் என்றால், விடுபட்ட சில வாக்குறுதிகளை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு “இதை நிறைவேற்றவில்லை, அதை நிறைவேற்றவில்லை” என்று சொல்லிவிட்டு இருந்தார், சொல்லிக்கொண்டு இருந்தார் என்று சொல்லக்கூடாது, புலம்பிக் கொண்டிருந்தார். அதையும் நாம் நிறைவேற்றியதும் - என்ன சொல்லுவது என்று  தெரியாமல் எதையுமே நிறைவேற்றவில்லை அப்படி என்று ஒரே வரியில் சொல்லி இருக்கிறார்.

பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டுவிட்டதா நினைக்குமாம். அதுபோல எதிர்க்கட்சித் தலைவர் நினைத்துக் கொண்டு இருக்கிறார். இவர் வேண்டுமென்றால் கண்ணை மூடிக்கொண்டு இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டு மக்கள் 19 மாதத்துக்கு முன்பே விழித்துவிட்டார்கள். இருண்ட காலத்தை முடித்து வைத்து, உதயசூரியனின் காலத்தை உருவாக்கிவிட்டார்கள். எனவே, மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் எரிச்சல் வார்த்தைகளுக்கெல்லாம் நான் விரிவாக பதில் சொல்ல விரும்பவில்லை. நாங்கள் சொன்ன வாக்குறுதிகள் உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கே நேரம் கிடைக்கவில்லை. இதற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்லிக் கொண்டிருப்போம். ஏதோ அரசியலில் தாங்களும் இருக்கிறோம் என்று காட்டுவதற்காக நம்மை பற்றி விமர்சிக்கிறார்கள். ஆனால் எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு நாங்கள் உண்மையாக இருக்கிறோம். உணர்வுப் பூர்வமாக உழைக்கிறோம். தமிழ்நாட்டை இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக ஆக்குவது ஒன்றுதான் என்னுடைய குறிக்கோள்.

ஆளுநரை சந்தித்த ஆன்லைன் விளையாட்டு நிர்வாகிகள்..! திடீர் ஆலோசனை.? என்ன காரணம் தெரியுமா..?

முதலிடத்தில் தமிழ்நாடு

கடந்த ஆண்டு இந்தியா டுடே-யில் ஓராண்டு நிறைவேற்றப்பட்ட பிறகு இந்தியாவில் இருக்கக்கூடிய முதலமைச்சர் வரிசைப்படுத்திய நேரத்தில் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் முதலிடம் என்று அவர்கள் கணக்கெடுத்து அறிவித்தார்கள். அப்போது நிருபர்கள் கேட்டபோது நான் சொன்னேன், எனக்கு இது பெருமையல்ல, என்னைப் பொறுத்தவரையில், நான் முதல்வனாக பொறுப்பேற்று முதலிடத்திற்கு வந்திருப்பதைவிட நான் முதல்வனாக பொறுப்பேற்று இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்திற்கு வரவேண்டும் இதுதான் என்னுடைய இலட்சியம் என்று நான் சொன்னேன். அதுதான் என்னுடைய குறிக்கோள். அதைதான் நாங்கள் எதிர்நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

குஜராத் சட்டசபை தேர்தல்..! பாஜக வெற்றி..! நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்- எச்.ராஜா நம்பிக்கை
 

click me!