குஜராத் சட்டசபை தேர்தல்..! பாஜக வெற்றி..! நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்- எச்.ராஜா நம்பிக்கை

By Ajmal KhanFirst Published Dec 8, 2022, 1:13 PM IST
Highlights

குஜராத்தில் பாஜகவின் மீண்டும் வெற்றி பெற்றிருப்பது மோடியின் செல்வாக்கை பிரதிபலிப்பதாக தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்த வெற்றி எதிரொலிக்கும் என தெரிவித்துள்ளார். 
 

மோடி செல்வாக்கு நிருபிக்கப்பட்டுள்ளது

குஜராத் தேர்தல் வெற்றியை தொடர்ந்து சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.  அப்போது செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா, கடந்த முறை நடைபெற்ற குஜராத் சட்டமன்ற தேர்தலில் 99 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக தற்போது 150 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையாக ஆட்சியைப் பிடித்துள்ளது.  இதன் மூலம் ஊழலற்ற ஒரு ஆட்சியை நடத்தி வரும் பிரதமரின் செல்வாக்கை இந்த வெற்றி நிரூபித்துள்ளதாக கூறினார். டெல்லியில் மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றிருப்பது  வானில் தோன்றி மறையும் ஓர் ஏரிகல் போன்ற நிகழ்வு ஆகும் என தெரிவித்தார்.

திமுகவிற்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம்..! திடீர் என ஒத்திவைத்த எடப்பாடி..! என்ன காரணம் தெரியுமா..?

ஆம் ஆத்மி தற்காலிக வெற்றி

முன்னர் மத்திய பிரதேச தேர்தலில் மாயாவதி வெற்றி பெற்ற போது இனி பாஜகவும் காங்கிரசும் வெற்றி பெறாது என பத்திரிகையாளர்கள் ஒப்பீடு செய்து கருத்து தெரிவித்தார்கள்.  தற்போது மாயாவதி அவர் வசிக்கக்கூடிய மாநிலத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை,  அது போன்றே ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியை ஒரு தற்காலிக வெற்றியாக பார்ப்பதாக தெரிவித்தார்இமாச்சல் பிரதேசத்தை பொறுத்தவரை அங்கு காங்கிரஸ்,பாஜக என மாறி மாறி ஆட்சி அமைத்து வருகின்றன.  அது போன்று தான் தற்போது நிலையும் பார்ப்பதாக தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

பொறியியல் கல்லூரியில் எந்த ஆசிரியரும் தமிழ்ப் பாடம் நடத்த அனுமதியா? இதுவா தமிழுக்கு செய்யும் மரியாதை? -ராமதாஸ்
 

click me!