ராமதாஸுக்கு எதிராக ஆவேசமாக கிளம்பிய சி.என்.ராமமூர்த்தி... அன்புமணிக்கு எதிராக பிரச்சாரம்..!

By Thiraviaraj RMFirst Published Apr 5, 2019, 5:42 PM IST
Highlights

பணத்தை மட்டுமே பிரதான நோக்கமாக கொண்டு செயல்பட்டு வன்னியர் சமுதாயத்தை ஏமாற்றி வருபவர் ராமதாஸ் என வன்னியர் கூட்டமைப்பின் தலைவரான சி.என்.ராமமூர்த்தி அதிரடியாக குற்றம்சாட்டி பாமகவுக்கு எதிராக களமிறங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 

பணத்தை மட்டுமே பிரதான நோக்கமாக கொண்டு செயல்பட்டு வன்னியர் சமுதாயத்தை ஏமாற்றி வருபவர் ராமதாஸ் என வன்னியர் கூட்டமைப்பின் தலைவரான சி.என்.ராமமூர்த்தி அதிரடியாக குற்றம்சாட்டி பாமகவுக்கு எதிராக களமிறங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

பா.ம.க.வை டாக்டர் ராமதாஸ் தொடங்கியபோது வன்னியர்களின் முகமாக பார்க்கப்பட்டார் சி.என்.ராமமூர்த்தி. தன் அரசியல் வாரிசாக எப்போது, தன் மகன் அன்புமணியை  ராமதாஸ் ஆசீர்வதித்தாரோ அப்போதே வன்னிய சமூகம், ராமதாசிடம் இருந்து படிப்படியாக விலக ஆரம்பித்து வருகிறது. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ராமதாசை முழுமையாக தனிமைப்படுத்தும் முயற்சியில் முனைப்புக் காட்டி வருகிறார் சி.என்.ராமமூர்த்தி.

1980 களில் தொடங்கியது இவரது போராட்ட வாழ்க்கை. ஆறாண்டு காலம் தமிழகத்தில் வன்னியர் வாழுமிடம் எல்லாம் சென்று தங்கி அவர்களை வன்னியர் சங்கத்தில் உறுப்பினர்களாக்கி, தங்கள் சமூக இட ஒதுக்கீட்டுக்கான சாலை மறியல் போராட்ட களத்துக்கு  தயார்படுத்தியவர். 25 உயிர்களை களப்பலி கொடுத்த அந்த போராட்டம் இன்றளவும் பேசப்படுகிறது. பின்னர் பாட்டாளி மக்கள் கட்சி உருவாகக் காரணகர்த்தாவாக இருந்தவர் சி.என்.ஆர். அந்தக் கட்சியின் உருவாக்கத்தில் இவருக்கு பெரும் பங்குண்டு.

ராமதாசின் எதேச்சதிகார போக்கால் அங்கிருந்து விலகி, பல்வேறு வன்னியர் சங்கங்களை ஒருங்கிணைத்து ’வன்னியர் கூட்டமைப்பு’ என்ற அமைப்பை உருவாக்கி அதன் நிறுவனத் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். இப்போது அந்த அமைப்பை அனைத்து இந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சியாக மாற்றியுள்ளார். 
 

click me!