டி.டி.வி அணியை நினைத்து கலக்கம்... தேம்பி தேம்பி அழுத அதிமுக வேட்பாளர்..!

Published : Apr 05, 2019, 05:07 PM IST
டி.டி.வி அணியை நினைத்து கலக்கம்... தேம்பி தேம்பி அழுத அதிமுக வேட்பாளர்..!

சுருக்கம்

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் லோகிராஜன் பிரச்சாரம் செய்த போது தேம்பி தேம்பி அழுதது தொகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் லோகிராஜன் பிரச்சாரம் செய்த போது தேம்பி தேம்பி அழுதது தொகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமமுக கொள்கை பரப்பு செயலாளரான தங்க தமிழ்செல்வனின் தொகுதி ஆண்டிப்பட்டி. இங்கு டி.டி.வி. அணிக்கு செல்வாக்கு அதிகம். இருப்பினும் இடைத்தேர்தலில் நிற்காமல் தேனியில் மக்களவை வேட்பாளராக களமிறங்குகிறார் தங்க.தமிழ்செல்வன். இதனால் இந்த தொகுதி அ.ம.மு.க சார்பில் ஆர்.ஜெயக்குமார் போட்டியிடுகிறார். தொகுதியி லுள்ள பிரமலைக் கள்ளர் சமூக வாக்குகள்தான், வெற்றியைத் தீர்மானிக்கும். அதனால் தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க ஆகிய மூன்று கட்சிகளுமே அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களையே களத்தில் நிறுத்தியிருக்கிறது. 

அதிலும் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் லோகிராஜனும், தி.மு.க வேட்பாளராகக் களமிறங்கும் மகாராஜனும் உடன்பிறந்த அண்ணன், தம்பிகள். ஒருவருக்கொருவர் எதிரும் புதிருமாக களமிறங்குவதால் இந்தத் தொகுதி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தேனியின் பல்வேறு பகுதிகளிலும் திறந்த ஜீப்பில் சென்றபடி பிரச்சாரம் செய்தார் லோகிராஜன்.

அப்போது அவர் தாய் பிறந்த தாய் கிராமமான மறவட்டியில் வாக்கு சேகரித்த போது திடீரென தேம்பி தேம்பி அழத்தொடங்கினார். இதனால், தொண்டர்களும் சுற்றியிருந்தவர்களும் சோகத்தில் ஆழ்ந்தனர். அப்போது கூட்டத்திலிருந்து ஒரு பெண் "அழுவாம நல்லா சொல்லுங்க. இங்க பூராம் ரெட்டலைக்குத்தான் ஓட்டுபோடுவாங்க" எனக் கூறுகிறார். அதனைத் தொடர்ந்து சில ஆண்களும் அழக் கூடாது, ஓங்கிப் பேசு, ஓங்கிப் பேசு என கோஷமிட்டனர்.

ஆண்டிப்பட்டி தொகுதி ஏற்கெனவே கவனம் பெற்றிருக்கிறது. எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அதிமுகவின் கோட்டை  இத்தொகுதி. இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் லோகிராஜனின், திமுகவின் வேட்பாளர் மகாராஜன் ஆகியோர் சகோதரர்கள் என்பது இந்த முறை தொகுதியில் சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கிறது. ஆனாலும் அதிமுகவினர் அனைவரும் டி.டி.வி அணிக்கு தாவி விட்டதால் இந்த முறை அமமுக வேட்பாளர் ஜெயகுமார் வெற்றி பெறுவது உறுதி என கருத்துகணிப்புகளும் உறுதி செய்து வருகின்றன. ஆகையால் தோல்வி பயம் வாட்டுவதால் லோகிராஜன் அழுதாவது மக்களின் ஆதரவை பெற்று வெற்றி பெற வேண்டும் என நினைப்பதாக அத்தொகுதி மக்கள் கூறுகின்றனர். 

இந்தத் தொகுதியில் அண்ணன் -தம்பிகளை வீழ்த்தி விட்டு அமமுக வேட்பாளரான ஜெயகுமார் வெற்றி பெறுவார் என கூறப்படுகிறது. 
 

PREV
click me!

Recommended Stories

லாட்டரி மார்ட்டின் மகளை ஏமாற்றி திருமணம் செய்தவர் ஆதவ் ஆர்ஜூனா..! விஜய் EX மேலாளர் பகீர் குற்றச்சாட்டு..!
ஒரு பாண்டிச்சேரிக்காரர் தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக்குகிறார்.! விஜய் முன்னாள் மேனேஜர் கடும் குற்றச்சாட்டு