பளீரென போட்டுடைத்த மோடி..! நச்சுன்னு 2 கேள்வி ... அதிரடியான 2 பதில்..!

Published : Apr 05, 2019, 04:10 PM IST
பளீரென போட்டுடைத்த மோடி..! நச்சுன்னு 2 கேள்வி ... அதிரடியான 2 பதில்..!

சுருக்கம்

பிரதமர் நரேந்திர மோடி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

அப்போது பாரதிய ஜனதா அரசின் மீது இஸ்லாமியர்கள் நம்பிக்கை வைக்காதது பற்றி உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு பிரதமர் மோடி, "நான் இஸ்லாமியர்களுக்காக எதுவும் செய்யவில்லை. அதே போல இந்துக்களுக்கும் தனியாக எதையும் செய்யவில்லை. என்னுடைய ஒரே இலக்கு என்னவென்றால் 2022க்குள் எல்லா குடும்பத்திற்கும் சொந்தமாக ஒரு வீடு இருக்க வேண்டும் என்பது மட்டுமே. அது இந்துவாக இருக்கலாம் இஸ்லாமியர்களாக இருக்கலாம்.

அனைவருக்கும் வீடும் கிடைக்க வேண்டும். மின்சாரமும் கிடைக்க வேண்டும். என்னுடைய அரசை பொருத்தவரையில் மதத்திற்கு இடம் கிடையாது. ஆனால் ஒரு சிலர் வாக்குகளை கைப்பற்றும் நோக்கத்தில் மதத்தை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, "அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது பற்றி நான் மட்டுமல்ல.. அனைவருமே ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என விரும்புகின்றனர். இதில் தீர்வு ஏற்பட நாம் சுப்ரீம் கோர்ட் முடிவு எப்போது வெளிவருகிறதோ அதுவரை காத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Thaimaman Thanga Mothiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் யாருக்கெல்லாம் கிடைக்கும்? தொடங்கியது கணக்கெடுப்பு..! பேரு குடுத்தாச்சா?
Rahul Gandhi: சாதி ரீதியான சர்ச்சை பேச்சு? ராகுல் காந்தி மீது பாய்ந்தது வழக்கு!