64 வயதில் பாலியல் தொல்லை கொடுத்த அரசியல் நட்சத்திரத்தின் மனைவி... அதிர வைக்கும் உதவியாளர்..!

By Thiraviaraj RMFirst Published Apr 5, 2019, 2:20 PM IST
Highlights

தேர்தல் நெருங்கும் நேரத்தில் முன்னாள் முதல்வர் மனைவி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரது உதவியாளர் புகார் அளித்திருப்பது அரசியல் களத்தை அதிர வைத்துள்ளது. 

தேர்தல் நெருங்கும் நேரத்தில் முன்னாள் முதல்வர் மனைவி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரது உதவியாளர் புகார் அளித்திருப்பது அரசியல் களத்தை அதிர வைத்துள்ளது. 

ஆந்திர மாநிலத்தில் வரும் 11ம் தேதி மக்களவை மற்றும் சட்டமன்றத் தேதல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரபல நடிகரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவின் இரண்டாவது மனைவி 64 வயதான லட்சுமி பார்வதி மீது பாலியல் குற்றச்சாட்டை அவரது உதவியாளர் அளித்துள்ளார்.

தமிழகத்தில் எம்.ஜி.ஆரை போல இப்போதும் ஆந்திராவில் கடவுளாக மதிக்கப்படுபவர் என்.டி. ராமராவ். ஆந்திராவில் முதல்வராக இருந்த அவர் 1996ம் ஆண்டு மரணமடைந்து விட்டார். ஏற்கெனவே பசவடரகம் என்பரை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த என்.டி.ராமாரவ் தன்னை பற்றி சுயசரிதையை எழுத வந்த 38 வயதான பேராசிரியை லட்சுமி சிவபார்வதி மீது மோகம் கொண்டார். 1991 முதல் 1993 வரை ரகசியமாக லட்சுமி பார்வதியுடன் குடும்பம் நடத்தி வந்தார். 

பின்னர் தனது 70 வயதில் என்.டி.ராமாவ், 1993ம் ஆண்டு ஊரறிய திருமணம் செய்து கொண்டார். 12 பிள்ளைகளை பெற்ற என்.டி.ராமாராவ் லட்சுமி பார்வதியை தனது அரசியல் வாரிசாக நிலை நிறுத்த முயன்றார். ஆனால், அந்தத் திட்டத்தை முறியடித்த மருமகன் சந்திரபாபு நாயுடு, தெலுங்கு தேசம் கட்சியை கைப்பற்றி இப்போது முதல்வராக இருந்து வருகிறார்.

1996ல் என்.டி.ராமாராவ் இறந்த பிறகு அரசியலை விட்டே ஒதுங்கி விட்டார் லட்சுமி பார்வதி. இந்நிலையில், அடுத்து தேர்தல் நெருங்கி வரும் வேளையில் 64 வயதாகும் அவர் மீது இடியாக ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக அவருக்கு உதவியாளராக இருந்து வரும் கோட்டி என்பவர் லட்சுமி சிவபார்வதி மீது பாலியல் குண்டூர் மாவட்டத்தில் உள்ள வெனுகொண்ட காவல் நிலையத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

அந்த வழக்கில், ’ கடந்த 5 ஆண்டுகளாக லட்சுமி பார்வதிக்கு உதவியாளராக இருந்து வருகிறேன். கடந்த சில மாதங்களாக அவர் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகிறார். ஐலவ் யூ சொல்கிறார், பாலியல் ரீதியாக பேசுகிறார். அதற்கு ஆதாரமாக வாட்ஸ் அப் மூலம் அவர் எனக்கு அனுப்பிய தகவல்களையும் போலீசில் ஒப்படைத்துள்ளேன்" என்று அதிர்ச்சியூட்டியுள்ளார். தற்போது காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

தேர்தல் நெருங்கும் வேளையில் இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது அரசியல் ஆதாயத்திற்காக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. காரணம் அவர், சந்திரபாபு நாயுடுவை பழி வாங்கும் நோக்கில் ஒய் எஸ்.ஆர்.காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

click me!