
லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் எடுத்த கருத்துக் கணிப்பில் அதிமுக கூட்டணி மூன்று தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக தெரிய வந்துள்ளது.
லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் பண்பாட்டு மக்கள் தொடர்பகம் சார்பாக 40 தொகுதிகளிலும் நடத்திய கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 33 தொகுதிகளில் வெற்றி பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதிமுக கூட்டணிக்கு மூன்று இடங்கள் மட்டுமே கிடைக்கும் என கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
40 தொகுதிகளில் 20 தொகுதிகளை கூட்டணிக்கட்சிகளுக்கு ஒதுக்கிய அதிமுக 20 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது. ஆனால், மயிலாடுதுறை, திருநெல்வேலி ஆகிய தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றிபெறும் என கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. கூட்டணிக்கட்சியான பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 சீட்டுகளில் கோவையில் மட்டுமே வெற்றி பெறும் எனத் தெரிய வந்துள்ளது.
அதிமுக கூட்டணியில் 7 தொகுதிகளீள் போட்டியிடும் பாமகவுக்கு ஒரு தொகுதிகள் கூட கிடைக்க வாய்ப்பில்லை என கருத்துக் கணிப்பு கூறுகிறது. அதேபோல் 4 சீட்டுக்களை பெற்றுள்ள விஜயகாந்தின் தேமுதிகவுக்கும் இதே நிலைதான் எனவும் கூறுகிறது. ஒரே ஒரு ஆறுதல் புதிய நீதிக்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட வேலூர் தொகுதியில் ஏ.சி.சண்முகம் திமுக வேட்பாளரான கதிர் ஆனந்துக்கு கடும் போட்டியை உருவாக்கி உள்ளதால் அங்கு இழுபறி நீடிப்பதாக கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. அங்கு ஏ.சி.சண்முகம் வெற்றிபெற்றால் அதிமுகவுக்கு ஆறுதலாக இருக்கும்.