
லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் எடுத்த கருத்துக் கணிப்பை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர். காரணம் கடந்த தேர்தல்களில் அவர்களது கருத்துக் கணிப்பு நேருக்கு மாறாக இருந்தது தான்.
மக்களவை -இடைத்தேர்தல் தேர்தலுக்கான லயோலா முன்னாள் மாணவர்கள் பண்பாட்டு மக்கள் தொடர்பகம் சார்பாக கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டது. அதில். திமுக 33 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 3 தொகுதிகளிலும் அமமுக இரு தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனக் கூறப்பட்டிருந்து. கடந்த சில காலமாக தேர்தலின் போது கருத்துக் கணிப்பை திமுகவுக்கு சாதகமாக லயோலா கல்லூரி எடுத்து வருவதாகவும் சில தேர்தல்களில் இக்கல்லூரி மாணவர்கள் எடுத்த கருத்துக் கணிப்புகள் ஏட்டிக்குப்போட்டியாக இருந்ததையும் எடுத்து நெட்டிசன்கள் கிழித்து தொங்க விட்டு வருகின்றனர்.
இதோ உங்கள் பார்வைக்கு....