பாஜகவின் தாறுமாறு தேர்தல் அறிக்கை இப்படி இருக்க போகிறதாம்...! இப்போதே எதிர்பார்ப்பை கிளப்பிய 8 ஆம் தேதி..!

By ezhil mozhiFirst Published Apr 5, 2019, 5:32 PM IST
Highlights

பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை வரும் 8ம் தேதி வெளியிடப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தேர்தல் அறிக்கையை டெல்லி பாஜக தலைமையகத்தில் அமீஷா வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது. 

பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை வரும் 8ம் தேதி வெளியிடப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தேர்தல் அறிக்கையை டெல்லி பாஜக தலைமையகத்தில் அமீஷா வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது. 

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் இந்த சமயத்தில் பல்வேறு கட்சிகள் அவர்களது அட்டகாசமான தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது அதில் முதல் கட்டமாக வரும் 11ஆம் தேதி தேர்தல் தொடங்க உள்ளது.

முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக பாஜக தேர்தல் அறிக்கையை அதாவது 8 ஆம் தேதி அறிவிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கை மக்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது. அதில் குறிப்பாக மத்தியில் ஆளும் பாஜக விற்கு எதிராக மக்கள் எழுப்பிய கேள்வி மற்றும் மத்திய அரசு எடுத்த பணமதிப்பிழப்பு உள்ளிட்ட சில திட்டங்களால் மக்கள் எவ்வாறு துன்புற்றனர் என்பதை கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கையை தயாரித்து இருந்தது காங்கிரஸ்.

குறிப்பிட்டு சொல்ல  வேண்டும்  என்றால், நீட் தேர்வு ஜிஎஸ்டி விவகாரம் பணமதிப்பிழப்பு வேலை இல்லா திண்டாட்டம், 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்கள் ஆக உயர்த்தப்படும், நீட் தேர்வு ரத்து செய்து மாநில அரசு அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடாது என்ற அறிவிப்பு, விவசாயிகளுக்கு வருடத்திற்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற  பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றிருந்தன

இது ஒரு பக்கம் இருக்க எந்தெந்த கட்சிகள் தேர்தல் அறிக்கையை எவ்வாறு கொடுத்துள்ளது என்பதை உன்னிப்பாக கவனித்து பாஜக மிக சூப்பரான மக்கள் மனதைக் கவரக்கூடிய பல அதிரடி திட்டங்களை வகுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையே மக்கள் மனதில் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றுள்ள நிலையில் மத்தியில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள எந்த மாதிரியான தேர்தல் அறிக்கையை தயார் செய்து வைத்திருக்கும் என  பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றன அரசியல் கட்சிகள்.

பாஜக தேர்தல் அறிக்கையில், அனைத்து மக்களுக்கும் பயன்பெறும் வகையிலும் பல கவர்ச்சியான புதுப்புது திட்டங்களும் இடம்பெற உள்ளது என்ற தகவல் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி  உள்ளது. 

click me!