தவிழ்ந்து வந்து பதவி பெற்ற இபிஎஸ்! பைத்தியம் பிடித்த கிறுக்கன் போல நடந்துகொள்கிறார்! வைத்தியலிங்கம் விளாசல்.!

By vinoth kumar  |  First Published Mar 19, 2023, 9:46 AM IST

நான் நினைத்து இருந்தால் அன்றைக்கு இபிஎஸ் முதல்வராக ஆகி இருக்க முடியாது. திமுகவால் தான் புறக்கணிக்கப்பட்ட போது எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய போது தொண்டர்களால் பொதுச்செயலாளர் தேர்வு செய்ய தொண்டன் ஒருவர் தலைவனாக வர வேண்டும் என்று சட்டவிதியை கொண்டு வந்தார். 


எடப்பாடி பழனிசாமி கையில் கட்சி போனால் ஜாதி கட்சியாக மாறிவிடும் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.  

தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எம்எல்ஏ வைத்தியலிங்கம்;- அதிமுக பொதுக்குழு தொடர்பாக நீதிமன்றத்தில்  எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம். நியாயம் எங்கள் பக்கம் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என தேர்தல் ஆணையம் இதுவரை அங்கீகரிக்கவில்லை. இன்றுவரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக  ஓபிஎஸ் தொடர்ந்து வருகிறார். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- ஆஹா இதுக்காக தான் ஓபிஎஸ்-சசிகலா-டிடிவி சந்திப்பு நடைபெறவில்லை.. உண்மையை போட்டுடைத்த பண்ருட்டி ராமச்சந்திரன்.!

டிடிவி.தினகரன், சசிகலா உள்ளிட்டோரை ஒன்றிணைத்து அதிமுகவை பலப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். இவை விரைவில் நடைபெறும். அதிமுக பொதுச்செயலாளராக நிச்சயமாக இபிஎஸ் வரவே முடியாது. பொதுச்செயலாளர் தேர்வு என்பது முறைப்படி அறிவிக்க வேண்டும். ஆனால், முறைப்படி எதுவும் நடைபெறவில்லை என குற்றம்சாட்டினார். 

எடப்பாடி பழனிசாமி கையில் கட்சி போனால் ஜாதி கட்சியாக மாறிவிடும். வாக்கு பெட்டி வைத்து பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தி வெற்றி பெற வேண்டும். தரையில் தவிழ்ந்து பதவி பெற்ற எடப்பாடி பழனிசாமி, நன்றி விசுவாசம் இல்லாமல் பதவிக்கு வந்தவுடன் பைத்தியம் பிடித்த கிறுக்கன் போல நடந்துக்கொண்டு இருக்கிறார். அவரை முதல்வராக்கியவரை சிறையில் இருந்து வரக்கூடாது என நினைத்த அர்ப்பபுத்திக்கொண்டவர் என வைத்தியலிங்கம் கடுமையாக விமர்சித்தார். 

இதையும் படிங்க;- பொதுக்குழுவுக்கு பிறகு தண்ணீர் பாட்டில்களை பார்த்தாலே அலர்ஜியா இருக்கு!சர்வாதிகாரி EPS! இறங்கி அடிக்கும் OPS.!

நான் நினைத்து இருந்தால் அன்றைக்கு இபிஎஸ் முதல்வராக ஆகி இருக்க முடியாது. திமுகவால் தான் புறக்கணிக்கப்பட்ட போது எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய போது தொண்டர்களால் பொதுச்செயலாளர் தேர்வு செய்ய தொண்டன் ஒருவர் தலைவனாக வர வேண்டும் என்று சட்டவிதியை கொண்டு வந்தார். அந்த சட்டவிதியை யாராலும் மாற்ற முடியாது. அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என கூறியிருக்கிறார். அவர் ஒரு மாநில தலைவர் தான். முடிவெடுக்க வேண்டியது பாரதிய ஜனதாவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தான் என வைத்தியலிங்கம் கூறினார். 

click me!