ஆடியோ வெளியே வராமல் இருக்கவே பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை அமைச்சரவையில் இருந்து நீக்கவில்லை. அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் படித்தவர் என்பதால் அவரது கருத்தை சாதாரணமாக எடுத்துகொள்ள முடியாது.
கிளைச்செயலாளர்களுக்கு இருக்கும் தகுதி கூட பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு கிடையாது என எடப்பாடி பழனிசாமி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி;- மாய மானும் மண்குதிரையும் ஒன்று சேர்ந்துள்ளது. பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான். ஓ.பி.எஸ், டிடிவி தினகரன் சந்திப்பானது காலியான கூடாரத்தில் ஓட்டகம் புகுந்ததைப் போன்றது. பண்ருட்டி ராமச்சந்திரன் எந்த கட்சிக்கும் விசுவாசமாக இருந்தது இல்லை. ஒரு கட்சியின் கிளைச்செயலாளர் பதவிக்கு கூட தகுதியற்றவர். பாமக, தேமுதிக, அதிமுக இன்று அமமுக என்று தான் போகும் எந்த கட்சிக்கும் விசுவாசம் இல்லாமல் இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் பேச தகுதியற்றவர்.
undefined
இதையும் படிங்க;- கவுண்டமணி, செந்தில் சந்திப்பு போன்றது ஓபிஎஸ், டிடிவி சந்திப்பு.. பங்கமாய் கலாய்க்கும் ஜெயக்குமார்..!
டிடிவி.தினகரனை ஓபிஎஸ் சந்திக்கும் போது ஓபிஎஸ்வுடன் இருந்த 3 பேர் எங்கே? வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன் ஆகிய 3 பேரும் ஓபிஎஸ்ஐ கைவிட்டுவிட்டனர். ஐபிஎஸ் போட்டியை பார்க்க சென்ற ஓபிஎஸ் சபரீசனை சந்தித்தது ஏன்? சபரீசனை சந்தித்ததன் மூலம் திமுகவின் பி டீம் ஓபிஎஸ் என்பது உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க;- ஓ இதுதான் விஷயமா? ஓபிஎஸ் மீது அதிருப்தியில் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன்? ஜெயக்குமார் அதிர்ச்சி தகவல்.!
30 ஆயிரம் கோடி ஊழல் ஆடியோ சர்ச்சையானதாலேயே அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆடியோ வெளியே வராமல் இருக்கவே பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை அமைச்சரவையில் இருந்து நீக்கவில்லை. அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் படித்தவர் என்பதால் அவரது கருத்தை சாதாரணமாக எடுத்துகொள்ள முடியாது. நான் எந்த சொத்தும் இதுவரை வாங்கவில்லை, எந்த தொழிலும் நான் செய்யவில்லை, விவசாயம் மட்டுமே செய்து வருகிறேன். திமுகவின் தூண்டுதலின் பேரில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதிமுகவை யாராலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது என இபிஎஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார். அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்களின் வசம் வந்துவிட்டது. யாரும் அதற்கு உரிமை கொண்டாட முடியாது. தலைவர் ஆளும் கட்சி அல்ல அதிமுக, தொண்டர்கள் ஆளும் கட்சி எனவும் இபிஎஸ் கூறியுள்ளார்.