நிர்வாகக் காரணங்களுக்காக அமைச்சர்களின் இலாக்காக்கள் மாறினாலும், தமிழக அரசு தொழில்துறையினருக்கு அளித்து வரும் ஆதரவும், தொழில் வளர்ச்சிக்காக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளும் என்றும் தொடரும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் மாற்றம்
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்று இரண்டு வருடங்கள் முடிவடைந்து 3 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்தநிலையில் தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் மாற்றம் செய்யப்பட்டு புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். நிதி அமைச்சராக தங்கம் தென்னரசுவும், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும், தொழில்துறை அமைச்சராக டிஆர்பி ராஜாவும், பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜூம் நியமிக்கப்பட்டுள்ளனர். வெள்ளக்கோயில் சாமிநாதனுக்கு தமிழ் வளர்ச்சி துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 வருடங்களாக அமைச்சரவையில் இருந்து அமைச்சர் நீக்கப்படாத நிலையில் தற்போது அமைச்சர் ஒருவர் நீக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
undefined
ஹூண்டாய் நிறுவனத்தோடு ஒப்பந்தம்
இந்தநிலையில், சென்னையில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்திற்கும், ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்திற்கும் இடையே, தென் கொரியா நாட்டை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் நூறு சதவிகித துணை நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் 20,000 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலையை நவீனமயமாக்கல் மற்றும் நவீன வகை கார்கள் உருவாக்குதல், மின் வாகன மின்கலன் கூட்டப்பட்ட தொகுப்பு, மின் வாகன மின்னேற்று நிலையங்கள் அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களை மேற்கொள்ள தேவையான வசதிகளை செய்து தருவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின், தொழில்துறை பொறுப்பு வகித்த அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றனர்.
அமைச்சரவை மாற்றம் ஏன்.?
இந்த நிக்ழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், நிர்வாகக் காரணங்களுக்காக அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றி அமைக்கப்பட்டாலும், தமிழக அரசு தொழில்துறையினருக்கு அளித்து வரும் ஆதரவும், தொழில் வளர்ச்சிக்காக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடரும் என கூறினார். இன்றைக்கு புதிதாக தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ள டி.ஆர்.பி ராஜா சிறப்பாக செயல்பட்டு அதிக முதலீட்டை தமிழகத்திற்கு ஈர்ப்பார் என்று உறுதியாக நம்புகிறேன். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
இதையும் படியுங்கள்
நிதி அமைச்சர் பதவியில் இருந்து பிடிஆர் மாற்றம்..! 4 மூத்த அமைச்சர்களின் இலாக்காவும் மாற்றி அறிவிப்பு