எங்களுக்கு தூக்கு என்றவுடன் ராம்ஜெத் மலானியை அழைத்து வந்தவர் வைகோ.. நெஞ்சுருகிய பேரறிவாளன்.

By Ezhilarasan BabuFirst Published May 19, 2022, 2:25 PM IST
Highlights

எங்களுக்கு தூக்கி என்றவுடன் எங்களுக்காக அத்வானி மற்றும் வாஜ்பாயிடம் மனு கொடுத்தவர் வைகோ, எங்களுக்காக ராம்ஜெத்மலானியை அழைத்து வந்து வழக்கு நடத்தியவர் வைகோ என சிறையில் இருந்து விடுதலையான பேரறிவாளன் கூறியுள்ளார்.

எங்களுக்கு தூக்கி என்றவுடன் எங்களுக்காக அத்வானி மற்றும் வாஜ்பாயிடம் மனு கொடுத்தவர் வைகோ, எங்களுக்காக ராம்ஜெத்மலானியை அழைத்து வந்து வழக்கு நடத்தியவர் வைகோ என சிறையில் இருந்து விடுதலையான பேரறிவாளன் கூறியுள்ளார். தனது வழக்கில் திருப்பம் ஏற்பட முழு காரணமாக இருந்தவர் வைகோ தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடிய பேரறிவாளனை உச்சநீதிமன்றம் அதிரடியாக விடுதலை செய்துள்ளது அவரின் விடுதலை தமிழகத்தில் பலரும் வரவேற்று பாராட்டி  வருகின்றனர். இந்நிலையில் விடுதலை பெற்ற பேரறிவாளன் நேற்றைய தினம் முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். இன்று அண்ணா நகரில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.  இச்சந்திப்பின் போது இருவரும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக உரையாடினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த வைகோ பேரறிவாளனுக்கு தூக்கு என்றவுடன் நேரடியாக வேலூர் சிறைக்கு சென்று அவரை மிகுந்த நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்படி தெரிவித்தேன். இளமைக்காலம் முதலே அவர் என்னுடைய வீட்டிற்கு அடிக்கடி வருவார்.

பேரறிவாளன் நிரபராதி அவரது  அம்மா அற்புதம்மாள் தனது மகனை போராடி மீட்டு வந்துள்ளார். அவருக்கு விடுதலை பெற்றதில் மிக்க மகிழ்ச்சி பேரறிவாளனை போலவே மீதமுள்ள ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும், அவர்கள் எந்த குற்றமும் செய்யாதவர்கள், இந்த வழக்கில் முழுக்க முழுக்க நீதி வென்றுள்ளது. 30 ஆண்டு காலம் சிறை, அவரது இளமைக்காலம் இதில் அழிந்துவிட்டது. இத்தனை ஆண்டுகாலம் சிறையில் இருந்தால் யாராயினும் சோர்ந்துபோய் விடுவார்கள். ஆனால் எமன் வாயிலிருந்து தன் மகனை அற்புதம் அம்மாள் மீட்டு வந்துள்ளார். இவ்வாறு வைகோ கூறினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய பேரறிவாளன் நான் சிறைக்கு போகும் முன்பே வைகோவை சந்தித்திருக்கிறேன், போடா காலத்தில் இருந்தபோதும் மகிழ்ச்சியான தருணம் என்ற அவர், எங்களுக்கு தூக்கு என்றவுடன் எங்களுக்காக அத்வானி வாஜ்பாய் அவர்களை சந்தித்து மனு கொடுத்தவர் வைகோ, எங்களுக்கு தூக்கு என்று அறிவித்தபோது ராம்ஜெத்மலானியை அழைத்து வந்து வாதாடியவர் வைகோ, அதுதான் எங்கள்  வழக்கில் மாற்றத்தை ஏற்படுத்தியது, எங்களுக்காக வாதாட ராம்ஜெத்மலானி வந்ததற்கு முழுக் காரணம் வைகோதான் இவ்வாறு பேரறிவாளன் கூறினார். 

click me!