இது தான் திராவிட மாடல் ஆட்சி.. ஆறு மாதத்தில் புரிந்த சாதனை.. பெருமிதம் கொள்ளும் மு.க.ஸ்டாலின்..

Published : May 19, 2022, 02:16 PM IST
இது தான் திராவிட மாடல் ஆட்சி.. ஆறு மாதத்தில் புரிந்த சாதனை.. பெருமிதம் கொள்ளும் மு.க.ஸ்டாலின்..

சுருக்கம்

தமிழகத்தில் தான் கடந்த ஏப்ரல் மாதம் மிகக் குறைவான பணவீக்க சராசரி உள்ளதாகவும், இது திராவிட மாடல் ஆட்சியின் சாதனை எனவும் முதல்வர் மு.கஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

இதுக்குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "இந்தியா முழுமைக்குமான ஏப்ரல் மாதத்திற்கான பணவீக்கத்தின் தேசிய சராசரி விகிதமானது 6.2 விழுக்காட்டிலிருந்து 7.79 விழுக்காடாக உயர்ந்துள்ளது. 

பல மாநிலங்களில் இது 9 விழுக்காட்டைத் தாண்டி மக்களை வாட்டி வரும்  நிலையில் நம் தமிழ்நாட்டில் இது மிகக் குறைந்த அளவில் 5.37 விழுக்காடாக மட்டுமே உள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இருந்ததைவிடக் குறைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது

மேலும் படிக்க: மக்களே உஷார்.. அடுத்த 4 நாட்களுக்கு மழை தொடர வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் அதிரடி.

உணவுப் பொருட்களின் விலைவாசி குறைந்திருப்பதுடன் - மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்துப் பயணம் வழங்கியதன் மூலம் குறைந்த போக்குவரத்துச் செலவு எனப் பல்வேறு நலத்திட்டங்களை உள்ளடக்கிய திராவிட மாடலின் நல்லாட்சியின் சாதனை இது என ஆய்வாளர்கள் பாராட்டுகின்றனர் இச்சாதனை தொடரும் என்று பதிவிட்டுள்ளார்.


மேலும் படிக்க: விரைவில் யாரும் பார்க்காத ”புதிய கோவை”.. ரெடியாகும் ”மாஸ்டர் பிளான்”.. கோவையில் தெறிக்கவிட்ட முதல்வர்..

PREV
click me!

Recommended Stories

Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
DMK Ministers : பரபரப்பை கிளப்பிய 6 திமுக முன்னாள் அமைச்சர்களின் கைது! யார் யார்? ஏன் கைது செய்யப்பட்டார்கள்?