திருவள்ளுவர், பாரதியார் தமிழ் இலக்கியங்களை கூறி தமிழர்களை ஏமாற்றி விடலாம் என நினைக்கும் மோடியின் பகல் கனவு ஒரு காலமும் நிறைவேறாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிட மாடல் ஆட்சியை மிக வெற்றிகரமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடந்து வருகிறது. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு பின்னர் சிறந்த ஆட்சி நடைபெற முடியுமா என்ற கேள்விக்கு பதிலாக திராவிட மாடல் ஆட்சி அமைந்துள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் ஸ்டாலின் சொன்னதை மட்டுமின்றி, சொல்லாததையும் செய்து காட்டி சாதித்து வருவதாக பாராட்டு தெரிவித்தார். இந்தியாவை கைப்பற்ற வேண்டும் என்பது மட்டுமல்ல, தமிழகம் உள்ளிட்ட பகுதிகளை ஒட்டு மொத்தமாக கைப்பற்றி இந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்டவைகளை திணித்து மாநில உரிமைகளை சிதைக்க வேண்டும் என்பதே சங்பரிவார் அமைப்புகளின் நோக்கம் என குற்றம்சாட்டினார். நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா என அழைக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தேன். திராவிட இயக்க சக்திகள் தமிழ் உணர்வு கொண்டவர்கள். வீறு கொண்டு எழுந்து திராவிட இயக்க கோட்டையை பாதுகாக்க வேண்டும் என வைகோ கேட்டுக்கொண்டார்.
ஆறுகுட்டி போனது போல் வேறு எந்த குட்டியும் போகாது... எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை!!
பாஜக கனவு நினைவேறாது
தமிழகத்தில் கால் எடுத்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பா.ஜ.க.வினர் தினம் தோறும் அறிக்கை, பேட்டி உள்ளிட்டவைகளை கொடுத்து வருகின்றனர்.திராவிட மாடல் ஆட்சி என்பது ரத்தம் சிந்தி உருவாக்கப்பட்ட கோட்டை என்பதை பாஜகவினர் மறந்து விட்டார்கள் என கூறினார். பிரதமர் மோடி, தமிழகத்திற்கு வந்தால் திருவள்ளுவரின் திருக்குறளையும், பாரதியாரின் கவிதைகள் பற்றி பேசுகிறார். வடக்கே சென்றால் இந்தியில் பேசுகிறார். இந்தியையும் இந்துத்துவா சக்திகளையும் நிலைநாட்ட பிரதமர் செயல்பட்டு வருகிறார். தமிழர்களை ஏமாற்றுவதற்கு திருவள்ளுவர், பாரதியாரை பற்றி சொல்லியும் தமிழ் இலக்கியங்களை பற்றி பேசினால் போதும் என பிரதமர் மோடி பகல் கனவு காண்பதாக வைகோ விமர்சித்தார். பிரதமர் மோடியின் பகல் கனவு ஒரு காலமும் தமிழகத்தில் நிறைவேறாது. அதற்கு தமிழகம் இடம் தராது என வைகோ உறுதிபட கூறினார்.
இதையும் படியுங்கள்
அண்ணன் பழைய பாசத்தோடு சொல்றேன் கேளு தம்பி...! ஆர் பி உதயகுமாருக்கு அறிவுரை வழங்கிய டிடிவி தினகரன்