"நான் சொன்னேன் என்று பிரதமரிடம் சொல்லுங்கள்" - கவர்னரிடம் வைகோ வலியுறுத்தல்

First Published Dec 2, 2016, 3:55 PM IST
Highlights


ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக மத்திய அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து வலியுறுத்த 

மதிமுக தலைவர் வைகோ இன்று காலை தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை ஆளுநர் இல்லத்தில் சந்தித்து பேசினார். 

 

சந்திப்பு பற்றி ஆளுநர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:

ஆளுநர் வித்யாசங்கர்ராவ் என் நீண்ட நாள் நண்பர். தமிழர்களின் வாழ்வோடு பின்னி பிணைந்த நீண்ட  பாரம்பரியம் கொண்ட ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பது பற்றி எடுத்துக் கூறினேன்.

 

அந்த தடையை நீக்க தமிழக அரசு எடுத்த முயற்சிகள் பற்றியும், மத்திய அரசு முயற்சி எடுத்த போது அதற்கு உச்சநீதிமன்றம் தடை வித்தது , சமீபத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நடப்பது என்ன வெண்ரே தெரியாமல் கருத்தை தெரிவிக்கிறார்கள். 

 

ஜல்லிக்கட்டில் உயிரிழப்பு ஏற்படுகிறது என்கிறார்கள் , அது நடக்கும்  கார் ஓட்டும் போது விபத்து ஏற்படுகிறது என்பதற்காக காரை ஓட்டாமல் இருக்கிறோமா , அதற்கு தடை விதிக்கிறோமா ? 

காளைகள் சிறிதளவு கூட துன்பஊருத்தப்படுவதில்லை.

 

சாராயம் கொடுப்பதாகவும் , கண்களில் மிளகாய் பொடி தூவுவது என்பதெல்லாம் கிடையவே கிடையாது. அவர்கள் வீட்டு பிள்ளைகள் போல் வளர்க்கிறார்கள். தெய்வம் போல் போற்றுகிறார்கள். காளைகள் இறந்து போனால் கோவில் கட்டி கும்பிடுகிறார்கள் . இதையெல்லாம் பிரதமருக்கு எடுத்து சொல்லுங்கள் என்றேன்.

வலிமையான வாதம் என்று கவர்னர் பாராட்டினார்.

 

 தடையை நீக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் விரிவாக விளக்கினேன். அதனை அவர் ஆமோதித்தார். பிரதமர் மோடி அவர்களை வரும் 10-ஆம் தேதி அன்று நடைபெற உள்ள நிகழ்ச்சி ஒன்றில் சந்திக்கவிருப்பதாக கூறினார் , அவரிடம் கூறுங்கள் நான் வலியுறுத்தி கூறியதாக கூறுங்கள் என்றேன்.  இதுகுறித்து பிரதமரிடம் வலியுறுத்தி கூறுமாறு வேண்டுகோள் வைத்தேன்.

 

இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

click me!