பெங்களூரு செல்கிறார் கருணாநிதி - மகள் வீட்டில் ஓய்வு எடுக்கிறார்

Asianet News Tamil  
Published : Dec 01, 2016, 12:55 PM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
பெங்களூரு செல்கிறார் கருணாநிதி - மகள் வீட்டில் ஓய்வு எடுக்கிறார்

சுருக்கம்

திமுக தலைவர் கருணாநிதி விரைவில் ஓய்வு எடுக்க பெங்களூருவுக்கு செல்கிறார். மகள் செல்வி வீட்டில் ஓய்வு எடுக்க உள்ளதாக திமுக தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

திமுக தலைவர் கருணாநிதி சமீப காலமாக ஒவ்வாமை காரணமாக கோபாலபுரம் இல்லத்திலேயே தங்கி சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த இரண்டு மாதமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார். 

இந்நிலையில் நேற்றிரவு திடீரென அவருக்கு  உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக மு.க.ஸ்டாலினும் , பொன்முடியும் வீட்டுக்கு வந்தனர். அதிகாலை 5 மணி அளவில் இருவரும் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தனர். 

பின்னர்  5 மணி அளவில் ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரது காரிலேயே அவர் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். 

அவர் இரண்டு நாட்கள் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும் என மருத்துவமனை  நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த 50 நாட்களுக்கும் மேலாக வீட்டிலேயே ஓய்வு எடுத்துவருகிறார் கருணாநிதி.

ஓய்வுக்கு ஓய்வு கொடுத்த தலைவர் இப்போது ஓய்வு எடுப்பது திமுக தலைவர்களையும் தொண்டர்களையும் பாதித்துள்ளது. இது கடந்த சில வாரங்களாக பூரண நலம் பெற்ற கருணாநிதி ஒரே நாளில் தம்மை பற்றிய 80 க்கும் மேற்பட்ட பேப்பர் செய்திகளை வாசித்து முடித்தாராம். 

மீண்டும் அவர் பழையபடி வேலைகளில் இறங்கினாலும், ஒரே இடத்தில் முடங்கி கிடப்பதும், வயோதிகம் காரணமாக சரியான டயட் கடைபிடிக்காததால் ஏற்பட்ட சத்துகுறைபாட்டையும் கணக்கில் கொண்ட மருத்துவர்கள் அவரை வெளியில் அழைத்து செல்ல வேண்டும் என கூறியுள்ளனர். 

இதையடுத்து மகள் செல்வி அப்பாவை நான் பெங்களூருவில் என் வீட்டில் வைத்து பார்த்துகொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதை ஸ்டாலின் உட்பட அனைவரும் ஏற்றுகொண்டனர். 

இருந்தாலும் புது இடம் புதுவிதமான சீதோஷ்ண நிலைக்கு உடல் ஒத்துழைக்க வேண்டும் எனபதால் அவருக்கு ஏற்ற சத்துள்ள டயட் மற்றும் தேவையான சிகிச்சை அளித்து இரண்டு மூன்று நாள் ஓய்வுக்கு பின்னர் பெங்களூருவுக்கு அனுப்ப உத்தேசித்தனர்.

இதற்காக இன்று காலை மருத்துவமனையில் அனும்திக்கப்பட்ட கருணாநிதி தொடர் சிகிச்சைக்கு பின்னர் பெங்களூரு சென்று ஓய்வெடுக்க உள்ளார் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

PREV
click me!

Recommended Stories

'என்னை வெறி ஏத்தி விட்றாத'.. மீண்டும் செய்தியாளரிடம் சீறிய சீமான்! என்ன நடந்தது?
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த புரட்சிக் கலைஞர்.. கேப்டன் விஜயகாந்துக்கு புகழாரம் சூட்டிய விஜய்!