
கதிராமங்கலத்தில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது மதிமுக பொது செயலாளர் வைகோ, திடீரென மயக்கமடைந்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மயங்கிய வைகோவை அங்கிருந்த தலைவர்கள் ஆசுவாசப்படுத்தினர்.
ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கதிராமங்கலத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியபோது, அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
மேலும் சிலர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி, வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்கள் இன்று கதிராமங்கலத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.
பேரணியாக சென்ற வைகோ உள்ளிட்ட தலைவர்கள், கதிராமங்கலத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடை ஒன்றில் அனைத்து கட்சி தலைவர்களும் உரை நிகழ்த்த ஏற்பாடு செய்ப்பட்டடிருந்தது.பேரணி முடிந்த நிலையில், அந்த மேடையில் மதிமுக பொது செயலாளர் வைகோ, உரை நிகழ்த்த ஆரம்பித்தார். பேசிக்கொண்டிருந்தபோதே அவர், மேடையில் சரிந்து விழுந்தார்.
இதனால், மேடையில் இருந்த தலைவர்களும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, மயங்கி விழுந்த வைகோவை, மேடையில் இருந்தவர்கள் ஆசுவாசப்படுத்தினர். சிறிது நேரத்துக்குப் பின்னர், வைகோ, மீண்டும் தனது பேச்சை துவங்கினார்.
வைகோ, உணவு அருந்தாமலும், சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் பேரணியாக சென்றதாலும் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.