
அடுத்த அவதாரம்..! பட தயாரிப்பாளர் ஆகிறார் வைகோ ...!
மதிமுக பொதுசெயலாளர் வைகோ, இதுவரை ஒரு அரசியல் வாதியாகத்தான் அனைவருக்கும் தெரியும்.அதிலும் மக்கள் பிரச்னை என்றால் வீறு கொண்ட சிங்கம் தான் ...
களத்தில் இறங்கி போராடி வெற்றி பெறுவதில் இவரை மிஞ்ச ஆளில்லை என்றே கூறலாம்......
வழக்கு என்றால்..... வழக்கறிஞர்
அரசியல் என்றால் ... அரசியல் வாதி
பிரச்னை என்றால் ..... மக்களோடு மக்களாக
உதராணம்: சீமை கருவேல மரம் வெட்டி....ஊரையே காப்பாற்றியவர் ......
இந்த வயதிலும் தளராது... கம்பீர தோற்றத்தோடு... வீறு நடை போட்டு.... அனைத்திலும் ஒரு கை பார்ப்பவர் தான் வைகோ
அந்த வகையில் தற்போது பட தயாரிப்பாளராக அடுத்த அவதாரத்தை எடுத்துள்ளார் வைகோ ...
தயாரிப்பாளர் தான் ....எதை பற்றி தெரியுமா?
சுதந்திர போராட்டத்தின் போது, ஆங்கிலேயர்களை வீரமாக எதிர்கொண்ட மங்கையான வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை ஏற்கனவே பல இடங்களில் நாடகமாக நடித்து மக்களிடேயே நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்
வேலு நாச்சியாரின் வாழ்கை வரலாற்றை அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தனது கண்ணகி பிலிம்ஸ் சார்பில் படம் எடுக்க உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்