
பரபரப்புக்கு போன சேலம்.... கட்டுபடுத்த முடியாத போலி மருத்துவரும் - டெங்கும்..
தமிழகத்தில் டெங்கு ஒரு சவாலாக விளங்கி வரும் சமயத்தில், சேலம் அதற்கெல்லாம் தலைமையிடமாக மாறும் அளவிற்கு டெங்கு பாதிப்பில் முதலிடம் பிடித்துள்ளது
அதில் போதுமான அளவில் மருத்துவரும் இல்லை.. வாகனமும் இல்லை ...
எல்லாம் சொல் அளவில் உள்ளது ....செயல் அளவில் இல்லை என்பதே நிதர்சனமான உண்மையாக உள்ளது என மக்கள் குமறல் ஒரு பக்கம் உள்ளது
பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவமனையில் தங்க இடமில்லை... ஆகையால் தனியார் மருத்துவமனையை நாடி வருகின்றனர் ......
டெங்குவிற்கு மிக சிறந்ததாக கருதப்படும் நில வேம்பு கசாயம் கிடைப்பதில் கூட தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது....
இந்நிலையில் போலி மருத்துவர்களும் சேலம் மாவட்டத்தில் தான் தங்கள் வியாபாரத்தை தொடங்கி உள்ளனர். அதாவது அதிகரித்து வரும் நோயாளிகளுக்கு ஏற்ப போலி மருத்துவர்களும் அதிகரித்து வருகின்றனர்
ஒரு பக்கம் சேலம் என்றாலே டெங்கு தான் என நினைக்க வைத்த சமயத்தில், போலி மருத்துவர்களுக்கும் சேலம் மாவட்டம் தான் பிரபலமாகி வருகிறது
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க.....தமிழக முதல்வரின் சொந்த மாவட்டம் தான் சேலம் என்பது குறிப்பிடத்தக்கது