மது குடித்த குரங்கு போல் மரத்துக்கு மரம் தாவும் ராஜேந்திர பாலாஜி - வைகையின் ஆவேச அலைகள் இழுக்கப்போகும் ஏழரை என்னவோ?

 
Published : Jun 30, 2017, 05:56 PM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
மது குடித்த குரங்கு போல் மரத்துக்கு மரம் தாவும் ராஜேந்திர பாலாஜி - வைகையின் ஆவேச அலைகள் இழுக்கப்போகும் ஏழரை என்னவோ?

சுருக்கம்

Vaikaiselvan And Rajendra balajis contraversial Talk

மாட்டுக்கறி  தடை விவகாரத்தில்மக்கள் எதை உண்ண வேண்டும், எதை உண்ணக்கூடாது என்று பாடம் நடத்த நீங்கள் யார்?’ என்று அத்தனை எதிர்க்கட்சிகளும் பா...வை பார்த்து நெஞ்சு நிமிர்த்திக் கேட்கின்றனர். ஆனால் மத்திய அரசின் அடிவருடியாகிவிட்டதால் அப்படி கேட்கும் தைரியத்தை தொலைத்து நிற்கிறது .தி.மு..

ஆனால் அதே .தி.மு..வினுள்ளிருக்கும் மாஜி அமைச்சரான வைகை செல்வன், சிட்டிங் அமைச்சராக இருக்கும் ராஜேந்திர பாலாஜியை நோக்கிதனியார் பாலில் கலப்படம், கலப்படம் என்று ஓலமிட்டு வரும் நீங்கள், காலையில் எழுந்ததும் மக்கள் எந்த பாலை வாங்க வேண்டும், எந்த பாலை வாங்க கூடாது என்று ஏன் அறிவிக்கவில்லை?” என்று கேள்விக்கொக்கி போட்டிருக்கிறார்.

மாநில சுயாட்சி தத்துவத்தை மறந்து மத்தியரசிடம் மண்டியிட்டு நிற்கும் பாவத்துக்காக .தி.மு.. உட்கட்சிக்குள்ளேயே ஊமையடி வாங்குவது புலனாகிறதா இப்போது! அத்தோடு விட்டாரா? முடிந்தால் என் மீது கை வை என்கிற அளவுக்கு வைகை போட்டுப் பொளக்கிறார் ரா.பாலாஜியை. உட்கட்சி அசிங்க எபிசோடின் கிளைமாக்ஸை காண துவங்கியிருக்கிறது .தி.மு..

தன்னை லூசு, பெண்கள் பிரச்னையால் பதவியிழந்தவர், வாயால் கெட்டவர்...என்றெல்லாம் வசைபாடிய ராஜேந்திர பாலாஜியை நோக்கிபொது சமூகத்தில் நேரடி பாதிப்பை உருவாக்கும் ஒரு பொருளைப்பற்றிக் கவலைப்படாமல் வெறுமனே பேசிக்கொண்டும், உளறிக் கொண்டும் இருக்கும் ராஜேந்திர பாலாஜியை பார்த்து நான் பரிதாபப்படுகிறேன். மது குடித்த குரங்கு மயக்கத்தில் மரத்துக்கு மரம் தாவுவது போல் செய்தியாளர்கள் முன்பாக குரங்கு சேட்டை செய்வது போல் பொறுப்பற்றவராக பேசி வருகிறீர்களேஉங்களை எப்படி மக்கள் மதிப்பார்கள்!

உங்கள் வாயிலிருந்து வரும் சொல் சட்டத்தின் சொல், அரசின் சொல் என்பதை அறியும் அறிவில்லையா உங்களுக்கு. தான் தோண்றித்தனமாக நாலாந்தர வார்த்தைகளை பேசும் உங்களை மக்கள் வெறுக்கிறார்கள். ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும், அரசியல் காற்றில் ஆலமரமும் சாயும் என்பது வரலாறு. அன்னை தமிழையும், அம்மா ஜெயலலிதாவையும் நம்பி பொதுவாழ்வுக்கு வந்தவன் நான். அமைச்சராக இல்லை என்றால் அடுத்த நாள் உங்களுக்கு முகவரி கிடையாது. ஆனால் தமிழ் எனக்கு முகவரி தந்திருக்கிறது.

தனியார் பாலில் கலப்படம் என்று மைக் முன்பாக பேசுவதை விட்டு, ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்து மக்களின் அச்சத்தை போக்குங்கள். எவை எல்லாம் கலப்பட பாலோ அவற்றை தடை செய்து நாட்டு மக்களுக்கு நல்லது செய்து ஆட்சிக்கும், கட்சிக்கும் பெருமையை தேடி தாருங்கள்.

நான் சொல்வது புரியுமென்று நம்புகிறேன்.” என்று பொளேர் வார்த்தைகளில் பிடரியில் அடித்து, அடித்துப் பேசி கட்டக்கடைசியில் அறிவுரையுடன் முடித்திருக்கிறார் வைகை. வைகை ஆறு காய்ந்து கிடந்தாலும், மாஜி வைகை செல்வனிடம் சிட்டிங் மாண்புமிகுக்கு எதிராக கரைபுரள ஆரம்பித்திருக்கும் இந்த விமர்சன வாதம் இன்னும் என்னென்ன தாக்குதல் பிரயோகங்களை தூண்டிவிடப்போகிறதோ என்று கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருக்கிறது எடப்பாடி அரசு.

மிலிட்டரி கட்டுப்பாட்டுடன் இயங்கிய கலகம் இப்படியா மிலிட்டரி ஹோட்டல் கொத்து பரோட்டா போல் சீரழிய வேண்டும்!?

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!