வைகைசெல்வன் சீக்கு வந்த பிராய்லர் கோழி; அழுகிபோன தக்காளி – வறுத்தெடுத்த ராஜேந்திர பாலாஜி…

 
Published : Jun 27, 2017, 07:16 PM ISTUpdated : Sep 19, 2018, 12:48 AM IST
வைகைசெல்வன் சீக்கு வந்த பிராய்லர் கோழி; அழுகிபோன தக்காளி – வறுத்தெடுத்த ராஜேந்திர பாலாஜி…

சுருக்கம்

vaigai selvan is a Broiler chick Rotten Tomatoes - Roasted Rajendra Balaji

தன்னை பற்றி குறை கூறும் வைகை செல்வன் ஒரு சீக்கு வந்த பிராய்லர் கொழி, அழுகிய தக்காளி எனவும் எதற்குமே உதவமாட்டார் எனவும் தெரிவித்தார்.

சில தனியார் பால் நிறுவன்ங்கள் பால் கெடாமல் இருப்பதற்காக ரசாயணத்தை கலப்பதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.

மேலும் பால் மாதிரிகள் ஆய்வு நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் வந்தவுடன் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து வந்த ஆய்வு முடிவுகளில் உயிருக்கு ஆபத்தான ராசாயணம் எதுவும் கலக்கப்படவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உயர்நீதி மன்றத்தில் தகவல் அறிக்கை தாக்கல் செய்தார்.

முடிவுகள் வெளியாகும் வரை அமைதி காத்திருந்த பால் முகவர்கள் சங்கம் அமைச்சருக்கு எதிராக கண்டன போர்க்கொடியை உயர்த்தியது.

இதனிடையே அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் அதிமுகவின் வைகை செல்வனும் எலியும் பூனையுமாய் செயல்பட்டு வந்தனர்.

இந்நிலையில் பால் விவகாரத்தில் வைகை செல்வனுக்கு நல்ல வேட்டை கிடைத்தது போல் ராஜேந்திர பாலாஜி இன்னும் போஸ்டர் ஒட்டியாகவே செயல்பட்டு வருவதாகவும், பால் முகவர் சங்கத்திடம் அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தனது பலநாள் கடுப்புகளை வெளியே கொட்டினார்.

இதைதொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திர பாலாஜி தனியார் பாலிலும், பால் பவுடரிலும் காஸ்டிக் சோடாவையும் பிளீச்சிங் பவுடரையும் சேர்ப்பதற்கான தகுந்த ஆதாரங்களை வெளியிட்டார்.

அப்போது செய்தியாளர்கள் வைகை செல்வன் பேசியது குறித்து கேள்வி எழுப்பியதற்கு தீயாய் கொந்தளித்து விட்டார் ராஜேந்திர பாலாஜி. வைகை செல்வன் ஒரு சீக்கு வந்த பிராய்லர் கோழி, அழுகிய தக்காளி எனவும் எதற்குமே அவர் உதவமாட்டார் எனவும் தெரிவித்தார்.

தனியார் நிறுவனங்களிடம் பணத்தை வாங்கி கொண்டு வைகை செல்வன் ஆயிரம் பேசுவார் எனவும் அவர் பேசுவதையெல்லாம் கண்டுகொள்ள கூடாது எனவும் தெரிவித்தார்.

நான் போஸ்டர் ஒட்டிதான் ஆனால் சினிமா போஸ்டர் ஒட்டியில்லை, அதிமுகவுக்காக போஸ்டர் ஒட்டியுள்ளேன் என தெரிவித்தார்.

நான் விவசாயி பெற்ற பிள்ளை தான் எனவும், வைகை செல்வன் என்னவோ  மிட்டா மிராசு, அதிபர் பெற்ற பிள்ளை போல் சீன் போடுகிறார் எனவும் பொங்கி எழுந்தார் ராஜேந்திர பாலாஜி.  

 

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!