
வருடத்திற்க்கு 10000 ஆயிரம் கோடி, இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய பால் நிறுவங்கள். முதல் பத்துக்குள் இருக்கும் பால் கம்பெனிகள், பால் கலப்படத்தில் ஏடுபட்டுள்ளதை மீடியா முன்பு வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார் பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
கடந்த மாதம் தனியார் பால் நிறுவனங்கள் ரசாயனம் கலப்படம் செய்வதாகவும், தனியார் பாலை குடிப்பதால் குழந்தைகளுக்கு புற்றுநோய் வருவதாகவும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் கூரி பெரும் பரபரப்பை எற்படுத்தினார்.
ராஜேந்திர பாலாஜியின் இந்த குற்றசாட்டிற்க்கு பால் முகவர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் பால் கலப்படம் தொடர்பான வழக்கில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் எந்த பால் மாதிரியும் பாதுகாப்பற்றது என நிரூபணமாகவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர், நான் சொல்வது பொய் என நிருபித்தால் தூக்கில் தொங்கவும் தயார் என்று பகிரங்கமாக தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் பாலில் ராசாயனம் இருப்பது உறுதி செய்யபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார், 'நெஸ்லே எவ்ரி டே பால் பவுடரில் காஸ்டிக் சோடா, பிளீச்சிங் பவுடர் கலந்துள்ளதாக ரிப்போர்ட் வந்துள்ளது. அதேபோல ரிலையன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பவுடரிலும் காஸ்டிக் சோடா, பிளீச்சிங் பவுடர் கலந்துள்ளதாக ரிப்போர்ட் வந்துள்ளது. மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட லேப்பில் நடத்தப்பட்ட, சோதனையில் இது தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் 1 கோடியே 92 லட்சம் லிட்டர் பால் தேவைப்படுவதாகவும் இதில் 40 லட்சம் லிட்டர் மட்டுமே தனியார் நிறுவனங்களிடம் இருந்து பெறப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் தனியார் நிறுவனங்களின் பாலை சோதனைக்கு அனுப்பி வந்த தகவலையும் ஆதாரத்துடன் வெளியிட்டார். இதில் இந்தியாவில் மிகப்பெரும் தனியார் பால் நிறுவனமான நெஸ்லே மற்றும் ரிலைன்ஸ் நிறுவனங்களை ஆதாரத்துடன் மீடியா முன்பு வெளியிட்டார்.
அந்த நிறுவனங்கள் வருடத்திற்க்கு சுமார் 10000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுவதாக கூறினார். அது மட்டுமல்ல இந்த பாலில் அவர்கள் காஸ்டிக் சோடா பிலீச்சீங் பவுடரையும் கலந்துள்ளது ஆதாரத்துடன் நிருபனமானது.
அட பாவிங்களா குழந்தைகள் குடிக்கின்ற பாலில் காஸ்டிக் சோடா பிலீச்சீங் பவுடரையுமா டா கலந்தீங்க?