
வைகை செல்வனை பற்றி பேட்டியின் போது கோபமாக பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெண்கள் கிட்ட தப்பாக நடந்ததால் தான் அம்மா இவர் அமைச்சர் பதவிய பிடுங்கினாங்க என்று அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
ஆவின் பால் விவகாரத்தில் தனியார் கம்பெனிகள் மீது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டியதால் தனியார் பால் முகவர்கள் சங்கத்திற்கும் அமைச்சருக்கும் மோதல் ஏற்பட்டது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் பாலில் கலப்படம் என்று அடித்து சொன்னார்.
இந்த விவகாரத்தில் திடீரென தலையை நுழைத்தார் அமைச்சரின் மாவட்ட்த்துக்கார்ரான முன்னாள் அமைச்சர் வைகை செல்வன்.
இதனால் ராஜேந்திர பாலாஜிக்கும் அவருக்கும் மோதல் ஏற்பட்டது. கூலிக்கு பேசுகிறவன் என்று அமைச்சர் வைகை செல்வனை கூற போஸ்டர் ஒட்டியாக வந்தவர் என்று பதிலுக்கு வைகை செல்வன் கலாய்க்க மோதல் பெரிதானது.
இந்நிலையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் வைகை செல்வன் பேட்டி பற்றி அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது கொந்தளிப்பின் உச்சிக்கு சென்ற ராஜேந்திர பாலாஜி இவர் யோக்கியதை தெரிந்துதான் அம்மா இவரை ஒதுக்கி வைத்தார்கள் மற்றவர்கள் அமைச்சர் பதவி பறிபோச்சுன்னா அதுக்கு கோஷ்டி பூசல்காரணமாக இருக்கும் இவருக்கு எதுக்கு பதவி போச்சுன்னு கேளுங்க பெண்களிடத்தில் தவறாக நடக்க முயற்சித்ததால அம்மா பதவிய பிடுங்கினாங்க தெரிஞ்சுக்கங்க என்று கோபமாக பதிலளித்தார்.
ஜெயலலிதா மறைந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை கோஷ்டி பூசலில் பல உண்மைகள் வெளிவரும் போல என செய்தியாளர்கள் பேசிக்கொண்டு சென்றனர்.