நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. திமுகவுடன் தேமுதிக கூட்டணியா? பிரேமலதா கூறுவது என்ன?

Published : Oct 22, 2021, 08:45 AM IST
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. திமுகவுடன் தேமுதிக கூட்டணியா? பிரேமலதா கூறுவது என்ன?

சுருக்கம்

செங்கல், சிமெண்டு, ஜல்லி, கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையும் 40 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. இதனால் அடித்தட்டு மக்கள் மட்டுமல்லாமல், நடுத்தட்டு மக்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் உடனடியாக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

திமுக ஆட்சி பொறுப்பேற்று குறைவான நாட்களே ஆகி இருப்பதால் இப்போதைக்கு சாதகமும் இல்லை. பாதகமும் இல்லை என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவியும், அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் தனது மூத்த மகன் விஜய பிரபாகரனுடன் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலுக்கு வந்து, சாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரேமலதா;- நாளுக்கு நாள் அதிகாித்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் சாமானிய மக்கள் தவித்து வருகிறார்கள். விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இது கண்டிக்கத்தக்க விஷயம்.

செங்கல், சிமெண்டு, ஜல்லி, கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையும் 40 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. இதனால் அடித்தட்டு மக்கள் மட்டுமல்லாமல், நடுத்தட்டு மக்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் உடனடியாக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக நிலைப்பாடு குறித்து அந்த நேரத்தில் முடிவு எடுக்கப்படும். திமுக அரசும் தற்போது வரை நடுநிலையாக செயல்படுகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்று குறைவான நாட்களே ஆகி இருப்பதால் இப்போதைக்கு சாதகமும் இல்லை. பாதகமும் இல்லை  என அவர் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!