#BREAKING எடப்பாடியாரின் வலது கரம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை.. அதிர்ச்சியில் அதிமுக.!

By vinoth kumarFirst Published Oct 22, 2021, 8:10 AM IST
Highlights

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புத்திர கவுண்டம்பாளையத்தில் உள்ள இளங்கோவன் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல், அவரது கல்வி நிறுவனம், சேலம், சென்னை, திருச்சி உள்ளிட்ட 27 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. இவர் பண மதிப்பு இழப்பின்போது சேலம் கூட்டுறவு வங்கி மூலம் 600 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 

சேலம் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவனுக்கு தொடர்புடைய 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வரும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டத்தில் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பானிசாமியின் வலது கரமாக அறியப்படுபவர் இளங்கோவன். இவர் ஜெயலலிதா பேரவையின் புறநகர் மாவட்ட செயலாளராகவும், மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும் இளங்கோவன் இருந்து வருகிறார். 

இந்நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புத்திர கவுண்டம்பாளையத்தில் உள்ள இளங்கோவன் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல், அவரது கல்வி நிறுவனம், சேலம், சென்னை, திருச்சி உள்ளிட்ட 27 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. இவர் பண மதிப்பு இழப்பின்போது சேலம் கூட்டுறவு வங்கி மூலம் 600 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 

அடுத்தடுத்து அதிமுக முக்கிய பிரமுகர்களின் வீடு மற்றும் அவலுகங்களில் சோதனை நடைபெற்று வருவது எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

click me!