அன்னிக்கு சொன்னீங்களே… இன்னிக்கு மன்னிப்பு கேட்பீங்களா..? திருமாவளவனை 'சீண்டும்' பாஜக

Published : Oct 22, 2021, 08:08 AM IST
அன்னிக்கு சொன்னீங்களே… இன்னிக்கு மன்னிப்பு கேட்பீங்களா..? திருமாவளவனை 'சீண்டும்' பாஜக

சுருக்கம்

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் விசிக தலைவர் மன்னிப்பு கேட்பாரா? என்று பாஜக பிரமுகர் நாராயணன் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை: கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் விசிக தலைவர் மன்னிப்பு கேட்பாரா? என்று பாஜக பிரமுகர் நாராயணன் கேள்வி எழுப்பி உள்ளார்.

கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் அதி வேகம் எடுத்துள்ளது. கிட்டத்தட்ட 100 கோடி பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டு உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு பிரச்சாரமும் முன் எடுக்கப்பட்டு வருகிறது. இந் நிலையில் கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் திருமாவளவன் மன்னிப்பு கேட்பாரா? என்று பாஜக பிரமுகர் திருப்பதி நாராயணன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ள பதிவில் கூறி இருப்பதாவது:

நடிகர் விவேக் தடுப்பூசி போட்டதற்குப் பின்னர்தான் அவர் சுயநினைவை இழந்தார் என்று மக்களை அச்சப்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்வதை தடுக்க முயன்ற

@thirumaofficial  அவர்களே, இன்று நூறு கோடி தடுப்பூசியை செலுத்தியுள்ளது இந்தியா.

நீங்கள் அன்று சொன்னதற்கு இன்று மன்னிப்பு கேட்பீர்களா?  என்று நாராயணன் திருப்பதி கேட்டுள்ளார்.

 

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி