சென்னையிலும் ரூ.100ஐ நெருங்கிய ஒரு லிட்டர் டீசல்.. கலங்கிய வாகன ஓட்டிகள்

Published : Oct 22, 2021, 07:42 AM IST
சென்னையிலும் ரூ.100ஐ நெருங்கிய ஒரு லிட்டர் டீசல்.. கலங்கிய வாகன ஓட்டிகள்

சுருக்கம்

சென்னையிலும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 100ஐ நெருங்கி இருப்பது வாகன ஓட்டிகளை கலக்கத்தில் கொண்டுபோய் விட்டுள்ளது.

சென்னை: சென்னையிலும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 100ஐ நெருங்கி இருப்பது வாகன ஓட்டிகளை கலக்கத்தில் கொண்டுபோய் விட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலைகேற்பதான் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. நாள்தோறும் புதிய விலை குறித்த அறிவிப்புகளை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் வெளியிடும்.

அதன் படி இன்றைய விலை நிலவரம் வாகன ஓட்டிகளை அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது. பெட்ரோல் விலை 31 காசுகள் உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.92க்கு விற்பனையாகிறது.

டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து, ரூ.99.92 காசுகளுக்கு விற்கப்படுகிறது. இன்று காலை 6 மணி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்ந்து விலை உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. பெட்ரோல் விலை எப்போதோ 100 ரூபாயை கடந்து அதிர்ச்சி அளித்தது.

இப்போது சென்னையில் ஒரு லிட்டர் டீசல் 100ஐ தொட உள்ளது பெரும் கலக்கத்தை வாகன ஓட்டிகளுக்கு தந்திருக்கிறது. தொடர் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

திமுகவை 'கை' க‌ழுவும் காங்கிரஸ்.. அதிமுக கூட்டணியில் ஐக்கியமாகும் பலமான கட்சிகள்.. அடித்து சொன்ன இபிஎஸ்!
I-PAC ரெய்டு வழக்கில் மம்தாவுக்கு பேரிடி..! சட்டத்தின் ஆட்சிக்கு மிகப்பெரிய அவமதிப்பு .. உச்ச நீதிமன்றம் காட்டம்..!