கட்சிப் பதவிக்கு வந்ததும் முதல்வர் ஸ்டாலின் சொன்ன அதே வார்த்தையை அச்சு அசல் மாறாமல் உதிர்த்த துரை வைகோ..!

By Asianet TamilFirst Published Oct 21, 2021, 9:19 PM IST
Highlights

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய அதே டயலாக்கைப் பேசி முதன் முறையாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார் மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ. 
 

மதிமுகவின் தலைமைக் கழக செயலாளராக ஆகியிருக்கிருக்கிறார் பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ. மு.க.ஸ்டாலினுக்கு முடிச்சூட்டப் பார்க்கிறார்கள் என்று வாரிசு அரசியலுக்கு எதிராகக் குரல் கொடுத்து திமுகவில் வெளியேறிய வைகோ, இன்று தன் மகனை அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது கடுமையான எதிர்வினைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக மூத்த தலைவர்கள் சிலர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில் இதையெல்லாம் அலட்டிக்கொள்ளாத துரை வைகோ, கட்சி பொறுப்பை ஏற்ற பிறகு முதன் முறையாக செய்தியாளர்களிடம் பேசினார். “தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று மதிமுக தலைமை, எனக்குத் தலைமைக் கழகச் செயலாளர் என்ற பொறுப்பைக் கொடுத்திருக்கிறது. 106 பேரிடம் நடத்திய வாக்கெடுப்பில் 104 பேர் வேண்டும் என்றும் இரண்டு பேர் வேண்டாம் என்றும் வாக்களித்திருக்கிறார்கள். இவ்வளவு பேர் என்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எனக்கு வாக்களிக்காத இருவரும், 'தம்பிக்கு நாம் வாக்களிக்க வில்லையே' என்று வருத்தப்படும் அளவுக்கு என்னுடைய செயல்பாடுகள் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார் துரை வைகோ.
துரை வைகோவின் இந்தப் பேச்சு, மு.க. ஸ்டாலின் பேசியதை நினைவுப்படுத்துகிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்ற அன்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஸ்டாலின் பேசுகையில், “எங்களுக்கு வாக்களிக்காதவர்களும் திமுகவுக்கு வாக்களிக்கவில்லையே என்று வருந்தும் அளவுக்கு எங்கள் பணி இருக்கும்” என்று தெரிவித்திருந்தார். மு.க. ஸ்டாலின் பேசிய அதே டயலாக்கை இன்று துரை வைகோவும் பேசியிருக்கிறார். என்னவொரு கோ-இன்ஸிடண்ட்!
 

click me!