தொடரும் அதிரடி… விஜயபாஸ்கர் உதவியாளர்களின் வீடுகளில் திடீர் ரெய்டு…

Published : Oct 22, 2021, 08:44 AM IST
தொடரும் அதிரடி… விஜயபாஸ்கர் உதவியாளர்களின் வீடுகளில் திடீர் ரெய்டு…

சுருக்கம்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர்களின் வீடுகள் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர்களின் வீடுகள் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர்களின் வீடுகள், உறவினர்கள் உள்ளிட்டோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். அண்மையில் அதிமுகவில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி. விஜயபாஸ்கர் வீடு, அலுவலகங்கள், உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டன.

இந்த சோதனையில் கிலோ கணக்கில் தங்கமும், பணமும் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந் நிலையில் தற்போது அவரது உதவியாளர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

உதவியாளர் முருகன், சரவணன் ஆகியோர் வீடுகள் உள்பட 4 இடங்களிலும் அதிரடியாக சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன உதவியாளர் சரவணனின் சென்னை நந்தம்பாக்கம் இல்லம், ஆயிரம் விளக்கில் உள்ள சாசனம் என்னும் நிறுவனம் ஆகியவற்றிலும் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி