தமிழக தேர்தல் களத்தில் சுற்றிச் சுழலப்போகும் மத்திய அமைச்சர்கள்.. தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை.

By Ezhilarasan BabuFirst Published Feb 18, 2021, 10:49 AM IST
Highlights

 மத்திய அமைச்சர்கள் இருவரும் மாநில தலைவர் டாக்டர் முருகன் அவர்கள் தலைமையில் காலை 10 மணி முதல் 11 மணி வரை சென்னை கோட்டத்தை சார்ந்த சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் மேற்பார்வையாளர்கள் மாவட்ட தலைவர்கள் கலந்து கொள்ளும் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில்  பங்கு கொண்டு வழிகாட்ட உள்ளார்கள். 

தமிழக தேர்தல் பொறுப்பாளர், மத்திய அமைச்சர் திரு. கிஷன் ரெட்டி மற்றும் தமிழக தேர்தல் இணைப்பாளர் மத்திய அமைச்சர் திரு. வி.கே சிங் அவர்கள் இன்று காலை 09.30மணி அளவில் தமிழக பாஜக தலைமை அலுவலகம் கமலாலயம் வருகிறார்கள். மத்திய அமைச்சர் இருவருக்கும் கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் அவர்கள் தலைமையில் பாஜக மூத்த தலைவர்கள், மாநில மாவட்ட மண்டல நிர்வாகிகள் சிறப்பு வரவேற்பு அளிக்க உள்ளனர். 

அது தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் இருவரும் மாநில தலைவர் டாக்டர் முருகன் அவர்கள் தலைமையில் காலை 10 மணி முதல் 11 மணி வரை சென்னை கோட்டத்தை சார்ந்த சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் மேற்பார்வையாளர்கள் மாவட்ட தலைவர்கள் கலந்து கொள்ளும் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில்  பங்கு கொண்டு வழிகாட்ட உள்ளார்கள். அதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் இருவரும் 11.15 மணி முதல் 12.15 மணி வரை சென்னை மவுண்ட் ரோட்டில் அமைந்துள்ள தாஜ் கோரமண்டல் க்ளப் ஹவுஸில் அறிவுசார் பிரிவு நடத்தும் 
முக்கிய பிரமுகர்களுக்கான ( MEETING WITH INTELLECTUALS) கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.

தொடர்ந்து தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் 12.30 மணி முதல்‌ 01.30 மணி வரை தமிழக பாஜக செய்தி தொடர்பாளர்கள் மற்றும் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கு கொள்ளக்கூடிய தலைவர்களுடன் நடக்கக்கூடிய தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு வழிகாட்டுகின்றனர். அதைத்தொடர்ந்து இறுதி நிகழ்ச்சியாக, தமிழக தேர்தல் பொறுப்பாளர், மத்திய அமைச்சர் திரு.கிஷன் ரெட்டி மற்றும் தமிழக தேர்தல் இணைப்பாளர் மத்திய அமைச்சர் திரு வி.கே சிங் அவர்கள்,தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெறும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் உயர்மட்ட மைய குழுவின் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கு கொள்கின்றனர்.
என பாஜக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!