என் நீண்டநாள் கனவு இன்று நிறைவேறியது... புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை மகிழ்ச்சி..!

By vinoth kumarFirst Published Feb 18, 2021, 10:16 AM IST
Highlights

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும், துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடிக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வந்தது. அவருக்கு எதிராகவும், அவரை புதுச்சேரியில் இருந்து திரம்ப பெற வேண்டும் என முதல்வர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், கிரண்பேடியை திரும்பப்பெறுவதாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் அறிவித்தார். 

இதற்கிடையே, தெலுங்கானா ஆளுநராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி மாநில ஆளுநராக பொறுப்பையும் கவனித்துக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை புதுச்சேரி துணை நிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தமிழிசைக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் முதல்வர் நாராயணசாமி, எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். 

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை;- பதவிப்பிரமாணத்தின் போது தமிழில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்பது என் நீண்டநாள் கனவு என்றார். தமிழ் புறக்கணிக்கப்படுவதில்லை, தமிழுக்கான அதிகாரம் என்றும் இருக்கும். துணைநிலை ஆளுநராக இல்லாமல் மக்களுக்கு துணை புரியும் சகோதரியாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

click me!