மக்களை முட்டாளாக்க நினைக்கும் ஒன்றிய அரசு... போட்டு தாக்கும் ப.சிதம்பரம்..!

By vinoth kumarFirst Published Jul 15, 2021, 1:15 PM IST
Highlights

தடுப்பூசி பற்றாக்குறை பிரச்சனையில் மக்களை முட்டாளாக்க அரசு முயற்சிக்கிறது. ஒன்றிய அரசின் புதிய சுகாதாரத்துறை அமைச்சர் மண்டாவியாவும் முந்தைய அமைச்சர் வழியிலேயே செல்வது வருத்தம் அளிக்கிறது. 

தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் கூறும் புகார்கள் எல்லாம் பொய்யா?  ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சித்மபரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தடுப்பூசி பற்றாக்குறை பிரச்சனையில் மக்களை முட்டாளாக்க அரசு முயற்சிக்கிறது. ஒன்றிய அரசின் புதிய சுகாதாரத்துறை அமைச்சர் மண்டாவியாவும் முந்தைய அமைச்சர் வழியிலேயே செல்வது வருத்தம் அளிக்கிறது. 

தடுப்பூசி பற்றாக்குறையாக உள்ளதாக ஒவ்வொரு மாநிலமாக கூறிக்கொண்டு இருக்கின்றன. தடுப்பூசிகள் இல்லை என்று தடுப்பூசி போடும் மையங்களில் அறிவிப்பு பலகைகள் போடப்பட்டுள்ளன. 

வரிசைகளில் நிற்கும் பொதுமக்கள் தடுப்பூசிகள் தீர்ந்துவிட்டதால் வீட்டுக்குத் திரும்பி செல்கின்றனர். தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் கூறும் புகார்கள் எல்லாம் பொய்யா?  ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். தடுப்பூசி இல்லாததால் மக்கள் திருப்பி அனுப்பப்படுவது பற்றிய நாளிதழ் செய்திகளும், டிவி. செய்திகளும் போலியா என காட்டாக வினவியுள்ளார். 

click me!