டெல்லி சென்றுவிட்டு வந்து பேசுகிறேன்.. விமான நிலையத்தில் பரபரத்த துரைமுருகன்.. பிரதமரை சந்திக்க டெல்லி பயணம்.

Published : Jul 15, 2021, 01:07 PM IST
டெல்லி சென்றுவிட்டு வந்து பேசுகிறேன்.. விமான நிலையத்தில் பரபரத்த துரைமுருகன்.. பிரதமரை சந்திக்க டெல்லி பயணம்.

சுருக்கம்

காவிரி நதிக்கு குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் தடுப்பணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதற்கான அனுமதியை வழங்கும் படி மத்திய அரசிடம் கேட்டு வரும் கர்நாடக அரசு அதற்காக பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. 

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழகத்தின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு இன்று டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளது. முன்னதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு மாலை 5 மணிக்கு டெல்லி விரைகிறது. வெள்ளிக்கிழமை நாளை மதியம் 1:30 மணி அளவில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் சந்தித்து மேகதாது அணை விவகாரம் குறித்து இக்குழு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. பின்னர் பிரதமர் மோடியையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

காவிரி நதிக்கு குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் தடுப்பணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதற்கான அனுமதியை வழங்கும் படி மத்திய அரசிடம் கேட்டு வரும் கர்நாடக அரசு அதற்காக பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. கர்நாடக அரசின் இந்த நடவடிக்கைகை தடுக்கும் வகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலையில் கடந்த 12 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது, அதில் மேல் பாசனத்தில் உள்ள மாநிலம் கீழ் படுகை மாநிலத்தின் அனுமதி பெறாமல் எந்த அணையையும் கட்டக்கூடாது என என்பது சர்வதேச விதி, ஆனால் அவற்றை மீறும் வகையில் கர்நாடக மாநிலத்தின் நடவடிக்கைகள் அமைந்துள்ளது. கர்நாடகத்திற்கு மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என மத்திய அரசிடம் வலியுறுத்தும் வகையில் முக்கிய 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

அந்த வகையில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழு, பிரதமர் மற்றும் நீர்பாசனத்துறை அமைச்சரை சந்திப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழகத்தின் அனைத்துக் கட்சி  பிரதிநிதிகள் குழு நாளை பிற்பகல் மத்திய அமைச்சரை சந்திக்க உள்ளது. இதற்காக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அதிமுக உள்ளிட்ட மொத்தம் 12 கட்சி பிரதிநிதிகள் இன்று மாலை டெல்லி விரைகின்றனர். இந்நிலையில் நிர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்னதாகவே இன்று காலை டெல்லி பயணம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, டெல்லி சென்றுவிட்டு வந்து அனைத்திற்கும் பதில் அளிக்கிறேன் என கூறிவிட்டு சென்றார். 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!