அன்பகம் கலைக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு... துரைமுருகன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Published : Jul 15, 2021, 12:44 PM ISTUpdated : Jul 15, 2021, 06:26 PM IST
அன்பகம் கலைக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு... துரைமுருகன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

சுருக்கம்

திமுக இளைஞரணி அலுவலகமான அன்பகத்தின் பெயரை அடைமொழியாகக் கொண்ட கலை, பல வருடங்களாக இளைஞரணியின் செயல்பாடுகளில் முக்கிய பங்காற்றியவர் 

திமுகவின் துணை அமைப்பு செயலாளராக அன்பகம் கலை நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ‘’திமுக சட்டதிட்ட விதிகளின்படி துணை அமைப்புச் செயலாளராக அன்பகம் கலை நியமிக்கப்படுகிறார். 

திமுக இளைஞரணி அலுவலகமான அன்பகத்தின் பெயரை அடைமொழியாகக் கொண்ட கலை, பல வருடங்களாக இளைஞரணியின் செயல்பாடுகளில் முக்கிய பங்காற்றியவர் என்பதுடன், திமுக தலைவர் ஸ்டாலினின் பயணத்திட்டங்களை திட்டமிடுவது, ஒருங்கிணைப்பது உள்ளிட்ட முக்கிய பணிகளை மேற்கொண்டு வந்தவர். எனவே, திமுகவில் துணை அமைப்புச்செயலாளர் பொறுப்பு இல்லாமல் இருந்த நிலையில், அந்த பொறுப்பும் உருவாக்கப்பட்டுள்ளது’’ என அவர் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!