Breakingnews:வரும் டிசம்பருக்குள் அதிமுக உட்கட்சி தேர்தல்... தேர்தல் ஆணையம் தகவல்..!

Published : Jul 15, 2021, 01:03 PM IST
Breakingnews:வரும் டிசம்பருக்குள் அதிமுக உட்கட்சி தேர்தல்... தேர்தல் ஆணையம் தகவல்..!

சுருக்கம்

அதிமுகவின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள், வியூகங்கள் குறித்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.  

அதிமுகவின் உட்கட்சி தேர்தல் வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று அக்கட்சி உறுதி அளித்திருப்பதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

முன்னதாக இம்மாதம் 89ம் தேதி நடந்த மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் உட்கட்சி தேர்தல் நடத்த அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப் பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலில் அடைந்த தோல்விக்கு பின்னர் ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டம் என்பதால், அதிமுகவின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள், வியூகங்கள் குறித்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

இதனையடுத்து இன்று, அதிமுகவின் உட்கட்சி தேர்தல் வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று அக்கட்சி உறுதி அளித்திருப்பதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

TVK vs Congress: காங்கிரஸ் எச்சரித்தும் கேட்காத தவெக! விஜய் பிரதமர் விவகாரத்தில் கூட்டணி விரிசலா?
DA Hike: அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு! சட்டசபையில் வெளியான சூப்பர் அறிவிப்பு