தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை அமைச்சராக பார்க்க திமுகவினருக்கு மனம் இல்லை - எல்.முருகன் காட்டம்

By Velmurugan s  |  First Published Feb 6, 2024, 5:49 PM IST

தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை அமைச்சராகவோ பார்க்க திமுகவினருக்கு மனம் இல்லை. தலித் சமூகத்தினரை தொடர்ந்து அடிமைகளாக வைத்திருக்க வேண்டும் என திமுகவினர் நினைப்பதாக எல்.முருகன் குற்றம் சாட்டி உள்ளார்.


மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பட்டியலின மக்களின் வாக்குகளுக்காக மட்டுமே அரசியல் செய்பவர்கள் திமுக-வைச் சேர்ந்த இந்த போலி திராவிட மாடல் சமூகநீதிக்காரர்கள்.

பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்கும், அவர்களுக்குத் தேவையான திட்டங்களுக்கும் ஏற்ப பணி செய்ய நேரமில்லாதவர்கள், தேர்தல் காலங்களின் போது வெற்றி பெற உருவாக்கும் காகித குப்பையே ‘சமூகநீதி’ எனும் தேர்தல் அறிக்கை.

Tap to resize

Latest Videos

திமிர்பிடித்த டி.ஆர்.பாலு: கொந்தளித்த அண்ணாமலை!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வளர்ச்சிப் பணிகளை ஜீரணித்துக் கொள்ள முடியாதவர்கள், அவர்களுடைய கையில் எடுக்கும் ஆயுதம் தான் இந்த தரங்கெட்ட வார்த்தைகள். திமுக-வைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவிற்கு இந்த தரங்கெட்ட பேச்சு முதல் முறையல்ல. தன்னுடைய வாழ்க்கை முறையை அதற்கேற்ப வாழ்ந்து பழகியவர் இனியும் இதை நிறுத்தப் போவதில்லை என்பது தெளிவாகிறது.

Rahul Gandhi Dog Biscuit row: தொண்டருக்கு நாய் பிஸ்கட் கொடுத்த ராகுல்? - வீடியோ வெளியிட்டு புகார் கூறும் பாஜக!

சமூகநீதிக்கும் இவர்களுக்கும் இருக்கும் தூரத்தை இன்று காட்டியுள்ளார்கள். போலி திராவிட மாடல் சமூகநீதி பிம்பத்தை முகத்தில் மாட்டிக் கொண்டு திரியும் உங்களின் (திமுக) முகமூடியை, வருகின்ற தேர்தலில் மக்கள் கிழித்தெறிவார்கள் என்பதில் எந்த மாற்றமுமில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!