பரசுராமனுக்கு 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட வைத்திலிங்கம் சீட் வாங்கிக் கொடுத்தார். திமுகவின் சீனியர்களில் ஒருவரான டி.ஆர்.பாலுவை வீழ்த்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
தஞ்சாவூர் முன்னாள் எம்.பி. பரசுராமன் (63) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது திடீர் மறைவு திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் நீலகிரி ஊராட்சிக்குட்பட்ட ரஹ்மான் நகர் பகுதியை சேர்ந்தவர் பரசுராமன். கடந்த 1985 ஆம் ஆண்டு அதிமுகவில் தன்னை இணைந்தார். அதன் பின்னர் கடந்த 2001 முதல் தொடர்ந்து 3 முறை ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்படார். இவர் வைத்திலிங்கத்தின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தார். இதன் காரணமாக பரசுராமனுக்கு 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட வைத்திலிங்கம் சீட் வாங்கிக் கொடுத்தார். திமுகவின் சீனியர்களில் ஒருவரான டி.ஆர்.பாலுவை வீழ்த்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
undefined
இதையும் படிங்க: கூட்டணியில் இழுபறி.! 12 மக்களவை தொகுதி, 1 ராஜ்ய சபா சீட் கேட்கும் பாமக.? பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்த ராமதாஸ்
இதையடுத்து, 2019-ம் ஆண்டு மீண்டும் அதிமுகவில் போட்டியிட வாய்ப்பு கேட்டபோது தஞ்சாவூர் தொகுதியை தமாகாவுக்கு ஒதுக்கீடு செய்ததில் வைத்திலிங்கத்தின் பங்கு அதிகமாக இருந்ததாகக் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட பரசுராமன் வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் அறிவுடை நம்பிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: ADMK vs PMK : ராமதாஸை வீடு தேடி சென்று சந்தித்த சி.வி.சண்முகம்.. அதிமுக கூட்டணிக்கு அழைப்பா.? காரணம் என்ன.?
இதனால் தேர்தல் நேரத்தில் களப் பணியாற்றாமல் ஒதுங்கி இருந்து வந்தார். இதனால் வைத்தியலிங்கம் மீது அதிருப்தியில் இருந்து வந்தார். இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டி அண்மையில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். இந்நிலையில் உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் எம்.பி. பரசுராமன் சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திமுக உள்ளிட்ட நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.