சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. தமிழகத்தில் அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சி.. திமுகவை போட்டு தாக்கும் AIADMK

Published : Dec 14, 2021, 06:54 AM IST
சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. தமிழகத்தில் அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சி.. திமுகவை போட்டு தாக்கும் AIADMK

சுருக்கம்

தமிழ்நாட்டை ஸ்டாலின் ஆட்சி செய்யவில்லை. அவர் மருமகனான சபரீசன் தான் ஆட்சி செய்கிறார். கருத்து சுதந்தரத்திற்கு எதிரான அரசாக இந்த திமுக அரசு உள்ளது. 

திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரம் மறுக்கப்படுவதாகவும், அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சி நிலவுவதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். 

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு பேரூராட்சியில் நடைபெற்ற  அதிமுக உட்கட்சி தேர்தலில் தொண்டர்களுக்கு விருப்ப மனுவை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். இதனையத்து, செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர்;- அதிமுக ஆட்சியில் கருத்து சுதந்திரம் இல்லை என்று கருத்து கூறிய திமுகவினர் இன்று தங்களது ஆட்சியில் கருத்து சுதந்திரம் வழங்குகிறார்களா என கேள்வி எழுப்பினார். தற்போது ஆட்சிக்கு எதிராகவும், மு.க.ஸ்டாலினுக்கு எதிராகவும் பேசினால் வழக்கு போடுகிறார்கள். கைது செய்கிறார்கள். தமிழ்நாட்டில் தற்போது அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சி தான் அமலில் உள்ளது.

இதையும் படிங்க;- Silenthra Babu : வெந்ததைத் தின்றுவிட்டு வாயில் வந்ததைப் பேசும் அண்ணாமலை.. பங்கமாய் பதிலடி கொடுத்த சேகர் பாபு.!

தமிழ்நாட்டை ஸ்டாலின் ஆட்சி செய்யவில்லை. அவர் மருமகனான சபரீசன் தான் ஆட்சி செய்கிறார். கருத்து சுதந்தரத்திற்கு எதிரான அரசாக இந்த திமுக அரசு உள்ளது. தமிழ்நாட்டின் நலனில் திமுக அரசுக்கு அக்கறை இல்லாத காரணத்தினால் தான் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. விசாரணைக்கு அழைத்து சென்ற கல்லூரி மாணவன் உயிரிழந்துள்ளார். அந்த அளவிற்கு தமிழகத்தில் அராஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

 

தமிழ்நாட்டில் காய் கறிகள் விலை, மளிகை பொருட்களின் விலை, கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த திமுக அரசு தவறியதால் பொதுமக்கள் மிகுந்த வேதனையில் இருந்து வருகின்றனர். மேலும், நீட் தேர்வு ரத்து, 7 பேர் விடுதலை உட்பட தமிழர் நலன் குறித்து நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் வாய் திறக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். 

இதையும் படிங்க;- சர்ச்சை பதிவு.. நாம் தமிழர் கட்சியின் செய்தி தொடர்பாளரை வீடு புகுந்து அலேக்கா தூக்கிய போலீஸ்..!

மேலும், அதிமுகவை பொறுத்தவரை ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த இல்லம் நினைவிடம் ஆக்க வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டு நினைவிடம் ஆக்கப்பட்டு திறக்கப்பட்டது. உயர்நீதிமன்றம் அந்த சட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஒப்படைத்திருக்கிறார்கள் மேல் முறையீடு சட்ட வல்லுனருடன் கலந்து ஆலோசித்து மேல் முறையீடு செய்யப்படும், அதற்கு முழு ஒத்துழைப்பு தீபா, தீபக் கொடுப்பதன் மூலம்தான் சிறப்பாக அமையும். ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த இல்லம் எங்களுக்கு கோவில் போன்றது என தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி