கட்டுபடியாகல சாமி... விட்டுடுங்க... திணறும் திமுக வேட்பாளர்கள்... திகைக்கவைக்கும் விஐபிகள்..!

By Thiraviaraj RMFirst Published Oct 1, 2021, 3:07 PM IST
Highlights

ஊரக உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக வேட்பாளர்கள் அக்கட்சி விஐபிகளுக்கு செலவு செய்ய முடியாமல் திணறி வருவதாக கூறப்படுகிறது.
 

ஊரக உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக வேட்பாளர்கள் அக்கட்சி விஐபிகளுக்கு செலவு செய்ய முடியாமல் திணறி வருவதாக கூறப்படுகிறது.

9 மாவட்ட ஊராட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரச்சாரம் கொடிகட்டி பறக்கிறது.  இதற்காக முக்கிய பிரமுகர்கள், நிர்வாகிகள் அந்தந்த பகுதிகளுக்கு சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். அவர்கள் வரும்போது,  பிரம்மாண்டமான ஏர்பாடுகள் செய்யும்படி முக்கிய நிர்வாகிகள் நிர்பந்திப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. 

இதுகுறித்து பேசிய அவர்கள், ‘’பெங்களூரு ரோஜா பூக்களான பிரம்மாண்டமான பெரிய சைஸ் மாலை ஒன்றின் விலை ரூபாய் 10 ஆயிரம். நடுத்தரம், சிறிய சைஸ் மாலைகள் குறைந்தது 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை விலை உள்ளது. ஒரு வார்டில் 10 இடங்களில் பிரசாரத்திற்கு தலைவர்கள் வந்தால் 3 இடங்களில் இது போன்ற மாலைகள் போடப்படுகிறது.

கடைசி கட்டமாக பிரசாரம் நடப்பதால் இப்போது ஆரத்தி எடுக்கப்படுகிறது. ஒரு ஆரத்தி எடுத்தால் 1,000 ரூபாய் தர வேண்டும். வசதி படைத்த வேட்பாளர்கள் கூட மாலைக்கும், ஆரத்தி தட்டுக்கும் ஏற்படும் செலவுகளை பார்த்து திணறுகின்றனர்.  ஆனால், சாதாரண வேட்பளார்கள் கடன் வாங்கி மாலை போட்டு வருகின்றனர். கட்டுப்படியாகவிலை சாமி என்று புலம்புகின்றனர்’’ எனக் கூறுகின்றனர். 

click me!