இவங்களால்தான் என் மகனை போலீசார் கைது செய்துள்ளனர்… முன்னாள் மேயர் கொலை வழக்கில் சீனியம்மாள் பரபரப்பு பேட்டி !!

By Selvanayagam PFirst Published Jul 30, 2019, 7:36 AM IST
Highlights

நெல்லை முன்னாள் மேயர்  உமா மகேஸ்வரி உள்பட 3 பேர் கொலை வழக்கில் 2 தி.மு.க. நிர்வாகிகள் தூண்டுதலின் பேரில் என் மகன் கார்த்தைகேயனை போலீசார் கைது செய்துள்ளனர் என்று சீனியம்மாள் கூறினார்.
 

கடந்த 23 ஆம் தேதி திருசெல்வேலி முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் பணிப்பெண் ஆகியோர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த திமுக நிர்வாகி சீனியம்மாள்  மகன் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சீனியம்மாள் , முன்னாள் மேயர் உமாமகேசுவரி கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணையாவது நேர்மையாக நடக்க வேண்டும். அரசியல் அழுத்தம் காரணமாகவே எங்கள் குடும்பத்தினர் மீது பழி போட்டுள்ளனர். எனது மகனை போலீசார் எங்கு வைத்துள்ளனர் என்று தெரியவில்லை என கூறினார்.
.
இன்று  என் மகனின் நிலை குறித்து தெரிவிக்க கோரி ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய உள்ளோம். நெல்லையை சேர்ந்த தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் 2 பேரின் தூண்டுதலின் பெயரிலேயே இந்த கைது நடவடிக்கையும், இந்த பிரச்சினையும் எங்களுக்கு வந்துள்ளது. 

திரும்பவும் சொல்கிறேன், எனக்கும் உமாமகேசுவரிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரசியல் நிகழ்ச்சிகளில் மட்டும்தான் நாங்கள் சந்தித்து பேசினோம் என கூறினார். இதே போல் செய்தியாளர்களிடம் பேசிய சீனியம்மாளின்  . கணவர் சன்னாசிஉமாமகேசுவரி உள்பட 3 பேர் கொலை வழக்கில் எனது மகன் கார்த்திகேயன் மீது அபாண்டமாக பழி சுமத்தப்பட்டுள்ளது என்றார்.

அரசியல் தூண்டுதல் காரணமாகத்தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கார்த்திகேயன் நிரபராதி என்பதை சட்டப்படி நிரூபிப்போம் என கூறினார்.
.என்ஜினீயரிங் படித்த அவனுக்கு ஆந்திராவில் வேலை கிடைத்துள்ளது. 

எனது மனைவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மதுரையில் தங்கி உள்ளோம். வருகிற 1-ந் தேதி நெல்லைக்கு சென்ற பிறகு அவனை வேலைக்கு அனுப்ப திட்டமிட்டு இருந்தோம். இந்த நேரத்தில் அவனை போலீசார் கைது செய்துள்ளார்கள் என சன்னாசி கூறினார்.

click me!