ஸ்டேட் வங்கியைத் தொடர்ந்து அஞ்சல் துறை… முன்னேறிய பிரிவினருக்கு குறைந்த கட்ஆஃப் !!

By Selvanayagam PFirst Published Jul 29, 2019, 11:35 PM IST
Highlights

அஞ்சல் துறையில் வேலைக்கு தேர்வாக பிற்படுத்தப்பட்டோர் 92 மதிப்பெண்களும், தாழ்த்தப்பட்டோர் 94.8 மதிப்பெண்களும் எடுக்க வேண்டும் என விதிகள் வகுப்பப்பட்டுள்ள நிலையில்  முன்னேறிய பிரிவினர் 42 மதிப்பெண்கள் எடுத்தால் வேலை எனும் நிலை சமீக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
.

இந்திய அரசின் அஞ்சல் துறை, கிளை அதிகாரிகளுக்கான தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அஞ்சல் துறை வட்டத்தில் 4,442 பணியிடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பத்தாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 100க்கு 92 மதிப்பெண்கள் பெற்றிருந்தால் தேர்ச்சி பெற்றுள்ளனர். தாழ்த்தப்பட்ட பிரிவினர் 94.8 மதிப்பெண் பெற்றிருந்தால் தேர்ச்சி பெறுவார்கள். பழங்குடியினருக்கு குறைந்தபட்ச கட் ஆஃப் மதிப்பெண் 89.6.

ஆனால் பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினர் 42 மதிப்பெண் வாங்கினாலே வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 42 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 453 முன்னேறிய பிரிவினர் அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்ச்சி பெறவும், பிற்படுத்த, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடுமையான போட்டித் தேர்வுகளில் முட்டிமோதி வெற்றிபெற வேண்டியதாயிருக்கிறது. ஆனால், முன்னேறிய பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள 10% பொருளாதார இட ஒதுக்கீட்டின் மூலம் மிகக்குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளவர்களும் தேர்வாகியுள்ளனர்.

சமூகத்தில் முன்னேறிய பிரிவினருக்கான விகிதாச்சாரம் குறைவாக இருக்கும்போதிலும், அதிகமான விகிதத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  ஏற்கனவே ஸ்டேட் வங்கியில் இந்த இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி முன்னேறிய பிரிவினருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அஞ்சல் துறையிலும் அதே முறை பின்பற்றப்பட்டுள்ளது.

click me!