“கற்பழிப்பு குற்றவாளிகளின் தோலை உரித்து சித்ரவதை செய்ய வேண்டும்” -மத்திய அமைச்சர் உமா பாரதி ஆவேசம்

First Published Feb 10, 2017, 5:38 PM IST
Highlights


பாலியல் வன்கொடுமையில் ஈடுபவர்களை, அவர்கள் தோல் உரியும் வரை சித்ரவதை செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் உமா பாரதி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் நொய்டாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் காரில் சஹாஜாஹான்பூருக்கு வந்து கொண்டு இருந்தனர்.

அந்த காரை வழிமறித்த சிலர், அந்த காரில் இருந்த 13 வயது சிறுமியையும், அந்த சிறுமியின் தாயாரையும் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

இது தொடர்பாக இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் 7 கட்டத் தேர்தலில் மத்திய அமைச்சர் உமா பாரதி பிரசாரம் செய்து வருகிறார்.

ஆக்ரா நகரில் நேற்று அவர் பேசுகையில், “ புலந்தசாஹர் பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

என்னுடைய ஆட்சிக் காலத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டால், பாதிக்கப்பட்ட பெண்ணின் முன் குற்றம் செய்தவர்களை சித்ரவதைக்கு ஆளாக்கி, அதை பாருங்கள் என்று தெரிவித்து இருக்கிறேன்.

பாலியல் குற்றங்கள் செய்பவர்களை,  பாதிக்கப்பட்டவர்கள் கண் முன், தலை கீழாகக் கட்டி தொங்கவிட்டு, அவர்களின் தோல் உரியும் வரை சித்தரவதை செய்ய வேண்டும்.

அந்த காயத்தில் மிளாகாய் பொடியையும், உப்பையும் கலந்து தடவி, அவர்கள் தங்களை விட்டுவிடுங்கள் என்று  கதறும் வரை விடக்கூடாது.

 

என்னுடைய ஆட்சிக் காலத்தில் இதைபோலத் தான், பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை அளித்தேன்.

போலீஸ் அதிகாரிகள் இது மனித உரிமை மீறல் என்று என்னிடம் தெரிவித்தபோதிலும், இதுபோன்ற அரக்கர்களுக்கு மனித உரிமை கிடையாது என்றேன்.

பாதிக்கப்பட்ட பெண்கள், குற்றத்தில் ஈடுபட்டவருக்கு செய்யப்படும் சித்ரவதைகளை பார்க்க வேண்டும், அவர்களின் அழுகையையும், கண்ணீரையும், கதறலையும் பார்த்தால்தான் அமைதி அடைவார்கள்'' எனத் தெரிவித்தார்.

click me!