ஜெயலலிதா அம்மையார் இருந்த வரைக்கும் தமிழ்நாட்டுக்குள்ள நீட் தேர்வு வரல, அந்த அம்மா இறந்த பிறகு இங்க இருக்கக்கூடிய அதிமுகவினர் பாஜ.க வோட தொல்லை தாங்காம நீட் தேர்வு துணை போனதாக உதயநிதி தெரிவித்துள்ளார்
பாஜக- தேர்தல் ஆணையம் கூட்டு
நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. அந்த வகையில், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனை ஆதரித்து தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பிரச்சாரம மேற்கொண்டார். அப்போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய உதயநிதி,
நம்முடைய எழுச்சித்தமிழர் அண்ணன் திருமா அவர்களுக்கு வெற்றிச்சின்னம் பானை சின்னத்தில் வாக்களித்து 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். சின்னம் ஒதுக்கீடு செய்வதில் இருந்தே பாஜக அரணு தேர்தல் ஆணையத்தை கையில் வைத்துக்கொண்டுள்ளது என தெரிவித்தார். பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் சின்னம் கிடைப்பதாகவும்,
திமுக செயல்படுத்திய திட்டங்கள்
இல்லையென்றால் மிகப்பெரிய சட்டப்போராட்டம் நடத்தினால் மட்டுமே சின்னம் உறுதிசெய்யப்படுவதாகவும் கூறினார். தற்போது ஜெயங்கொண்டம் பகுதியில் நிலக்கரி திட்டத்திற்கு எடுக்கப்பட்ட 8,7734 ஏக்கர் நிலம் திருப்பி வழங்கப்பட்டதாக கூறிய அவர், ஜெயங்கொண்டம் மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தும் வகையில் ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு இடம் ஒதுக்கப்பட்டு ரூபாய் 16 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி உதவி செய்யப்பட்டுள்ளது. ஜெயங்கொண்டம் வரை நான்கு வழி சாலை அமைக்க 185 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கலைஞர் நகர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 10 ஏரிகளை மேம்படுத்த ரூபாய் 9 கோடியே 60 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
சிலிண்டர் விலை 500 ரூபாய் உயர்த்திடுவாங்க
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் கிட்டத்தட்ட ஒரு கோடியே 16 லட்சம் மகளிர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் இருந்து இன்றுவரை அவங்களுடைய வங்கி கணக்கில் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை திட்டமாக வழங்கப்படுகிறது. மகளிர் உரிமைத்துறை திட்டத்தை விடுபட்டவர்களுக்கும் விரைவில் வழங்கப்படும்.மீண்டும் மோடி வந்தால் சிலிண்டருக்கு 500 ரூபாய் ஏத்திடுவாங்க, நம்முடைய தலைவர் அவர்கள் தேர்தல் அறிக்கையில் தெளிவா சொல்லி இருக்கிறார் நிச்சயமாக ஒரு கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய்க்கு நான் கொடுப்பேன் அப்படின்னு தலைவர் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். ஒரு லிட்டர் பெட்ரோல் 75 ரூபாய்க்கு கொடுப்பேன்னு வாக்குறுதி கொடுத்திருக்கிறார். சுங்கச்சாவடி இருக்கு இல்ல அனைத்து டோல் பூத்துகளும் அகற்றப்படும் என உதயநிதி தெரிவித்தார்.
பாஜக டெபாசிட் வாங்காது
ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிடுவதாக தகவல் வெளியானது. ஆனால் போட்டியிடாமல் பயந்து போய்விட்டார். தமிழ்நாட்டில் பாஜக டெபாசிட் கூட வாங்காது. கருப்பு பணத்தை ஒழிப்பேன் என மோடி தெரிவித்தார், புதிய இந்தியா பிறக்கும் என கூறினார் யாராவது புதிய இந்தியாவை பார்த்து உள்ளீர்களா எனக் உதயநிதி கேள்வி எழுப்பினர்.
இதையும் படியுங்கள்
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க அழுத்தம் கொடுப்போம்: எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி