Kanimozhi Campaign : அண்ணாமலையின் கணக்கு தப்பாகி கோவை தொகுதியில் வந்து மாட்டிக்கொண்டுவிட்டார்-விளாசும் கனிமொழி

By Ajmal KhanFirst Published Mar 29, 2024, 2:40 PM IST
Highlights

மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால்,  அப்படி ஒரு விபத்து நடந்தால் இந்தியாவின் கடைசி தேர்தல் இது என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்த கனிமொழி,  இனி தேர்தலே நடக்காது, யாரும் ஒன்றும் கேட்க முடியாது,  என்ன சட்டம் வேண்டுமானால் கொண்டு வருவார்கள் என கூறினார்

அண்ணாமலையின் தப்பு கணக்கு

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கோவை துடியலூர் பேருந்து நிலையம் அருகே திமுக கோவை பாராளுமன்ற வேட்பாளர் கணபதி ராஜகுமாரை ஆதரித்து கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய அவர், கோவை தொகுதியில் உள்ள மக்கள் தெளிவாக ஓட்டு போட வேண்டும் என கேட்டுக்கொண்டார்,

தவறாக வாக்களித்தால் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது என கூறினார்.  சொந்த தொகுதியான கரூரில் நின்றால் மக்கள் விரட்டி விட்டுவிடுவார்கள் என்று புதிதாக கோவை தொகுதியில் அண்ணாமலை போட்டியிடுகிறார். இங்கு வானதியின் சப்போர்ட்டில் வெற்றி பெற்று விடலாம் என கணக்கு போட்டு களமிறங்குகின்றார் அண்ணாமலை, கணக்கு தப்பாக போகி கோயம்புத்தூரில் மாட்டிக்கொண்டிருக்கிறார் அண்ணாமலை என கனிமொழி விமர்சித்தார்.

பொய் செய்திகளை பரப்பும் அண்ணாமலை

கோவை தொகுதியில் அண்ணாமலை மூன்றாவது இடத்திற்கு போட்டியிடுகின்றார் என தெரிவித்த கனிமொழி, திமுகவின் வெற்றி அசைக்க முடியாதது என கூறினார். தவறான விஷயங்களை, பொய்களை பேட்டி மூலம் அள்ளி அள்ளி வீசிக் கொண்டிருக்கலாம். கோட்டாவில் நல்ல புத்திசாலி அறிவாளியானவர்கள் படித்திருக்கின்றார்கள். தலைவர் கலைஞர் தந்த கோட்டாவில் தான் நீங்கள்(அண்ணாமலை) படித்து இருக்கின்றீர்கள் உண்மையை ஒத்துக் கொள்ளுங்கள் என தெரிவித்தார். போய் செய்திகளை வெளியிடவே பாஜகவில் தனி அமைப்பு வைத்திருக்கின்றனர் எனவும் விமர்சித்தார்.   ஒவ்வொரு இடத்திலும் பொய்யான செய்திகளை பரப்பி மக்களுக்கிடையில் பிரச்சினைகளை உருவாக்கி பொதுமக்கள் நிம்மதியாக வாழ முடியாது, வாழக்கூடாது என்ற நிலையை ஏற்படுத்தி இருக்கின்றனர் என தெரிவித்தார். 

மீண்டும் சுதந்திர போராட்டம்

தமிழ்நாட்டில் நிம்மதியாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் இருக்கக்கூடிய மக்களின் மனநிலை தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக வைத்துக் கொண்டால் போதும் என்பதாக இருக்கின்றன. அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் நாம் இந்த நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த நாடாளுமன்ற தேர்தல்  மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது .

பாரத் மாதா கி ஜே என்று சொல்லும் இவர்களில் ஆட்சியில் பெண்களின் நிலை என்ன? மணிப்பூரில் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டிருக்கின்றார்கள்.  பிரதமர் இது குறித்து கேட்டிருக்கின்றாரா ? என கேள்வி எழுப்பினார். சேலத்தில் இரண்டு விவசாயிகள் பிஜேபிக்கு பிரமுகருக்கு எதிராக செயல்பட்டதால் அமலாக்கத்துறை அதிகாரிகள் சமன் அனுப்பினர். பாஜகவில் குற்ற பின்னணியில் உள்ளவர்கள் சேர்ந்தால் அவர்களின் குற்றம்  இல்லாமல் போகின்றது என கூறினார். 

இதுவே கடைசி தேர்தல்

டெல்லி முதலமைச்சர் மற்றும் துணை முதல்வரை சிறையில் வைத்திருக்கின்றனர். குற்றத்தில் தொடர்புடையதாக சொல்லப்படும் ரெட்டி என்பவர் பாஜகவுக்கு அதிக தேர்தல் பத்திரம் தந்திருக்கின்றார். எதிர்த்துப் பேசியதால் அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் வைத்திருக்கின்றனர். இந்த தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை என தெரிவித்தார்.அதையும் மீறி மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால்,  அப்படி ஒரு விபத்து நடந்தால் இந்தியாவின் கடைசி தேர்தல் இது என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.  தேர்தலே நடக்காது யாரும் ஒற்றை கேட்க மாட்டார்கள்.  என்ன சட்டம் வேண்டுமானால் கொண்டு வருவார்கள்.  விவசாயிகளுக்கு தொழிலாளர்களுக்கு சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்கள் அமல்படுத்தப்படும் என கனிமொழி தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

அதிமுக வெற்றி பெற்றால் கோவை மீண்டும் தொழில் நகரமாகும்; சிங்கை ராமசந்திரனுக்கு ஆதரவாக பிரேமலதா பிரசாரம்

click me!