நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 20 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்களின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அந்த வகையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் எந்த, எந்த தொகுதியில் பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்..
சூடு பறக்கும் பிரச்சாரம்
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியில் கட்சி தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - தர்மபுரி, கிருஷ்ணகிரி தொகுதியில் திமுக காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் அதிமுக மற்றும் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யவுள்ளனர்.
தேர்தல் களத்தில் தலைவர்கள்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விருத்தாசலம், குள்ளஞ்சாவடி தொகுதியிலும் பாமக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். இதே போல தமிழக பா.ஜனதா மாநில தலைவர் கே.அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், சென்னை ஆகிய தொகுதிகளில் பாஜக, பாமக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.
திமுக கூட்டணிக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று தனது பிரச்சாரத்தை ஈரோடு தொகுதியில் தொடங்கவுள்ளார். அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தேனி தொகுதியில் உள்ள ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியின் தனக்கு பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
சூறாவளி சுற்றுப்பயணம்
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய தொகுதிகளில் அதிமுக மற்றும் தேமுதிக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். இதே போல இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியிலும், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி கோவை, பொள்ளாச்சி தொகுதியிலும் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
இதையும் படியுங்கள்