தர்மயுத்த அடிமை... தவழ்ந்து சென்ற அடிமை... இபிஎஸ் - ஓபிஎஸை பங்கம் செய்த உதயநிதி ஸ்டாலின்!

By Asianet TamilFirst Published Mar 4, 2020, 10:29 PM IST
Highlights

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும். இதைச் சொன்னால் ஒரு முந்திரிக்கொட்டை அமைச்சர் கோபப்படுவார். யாரைப் பற்றிக் கேள்வி கேட்டாலும் அவர்தான் பதில் சொல்வார். இன்னொரு அமைச்சர், சிறுவனை அழைத்து செருப்பைக் கழற்றச் சொல்கிறார். அதற்கு குனிய முடியவில்லை எனக் காரணம் வேறு சொல்கிறார். அதிமுககாரருக்கு குனிய முடியவில்லையாம். அங்கிருக்கும் எல்லோருமே குனிந்துகுனிந்து பதவிகளைப் பெற்றவர்கள்தானே. இது அனைவருக்கும் தெரியுமே.
 
தமிழகத்தில் இரு அடிமைகள் இருக்கிறார்கள். ஒருவர் தர்மயுத்தம் செய்த அடிமை; இன்னொருவர் தவழ்ந்து தவழ்ந்து சென்ற அடிமை என்று நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கரூருக்கு வந்திருந்தார்.   கரூரில் அதிமுக, பாஜக, தேமுதிக உள்பட பல்வேறு மாற்றுக் கட்சியினர் விலகி திமுகவில் இணைந்த விழா கரூரில் நடைபெற்றது. இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் இணையும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பொதுவாக ஆளுங்கட்சியில்தான் பிற கட்சியினர் இணைவார்கள். ஆனால், வரலாற்றில் முதன் முறையாக ஆளுங்கட்சியினர் எதிர்க்கட்சியில் இணைவதைப் பார்க்கும்போது அவ்வளாவு மகிழ்ச்சியாக உள்ளது. ஏனென்றால், அடுத்து திமுக ஆட்சியில் அமரபோகிறது என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. 
டி.என்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும். இதைச் சொன்னால் ஒரு முந்திரிக்கொட்டை அமைச்சர் கோபப்படுவார். யாரைப் பற்றிக் கேள்வி கேட்டாலும் அவர்தான் பதில் சொல்வார். இன்னொரு அமைச்சர், சிறுவனை அழைத்து செருப்பைக் கழற்றச் சொல்கிறார். அதற்கு குனிய முடியவில்லை எனக் காரணம் வேறு சொல்கிறார். அதிமுககாரருக்கு குனிய முடியவில்லையாம். அங்கிருக்கும் எல்லோருமே குனிந்துகுனிந்து பதவிகளைப் பெற்றவர்கள்தானே. இது அனைவருக்கும் தெரியுமே.

தமிழகத்தில் இரு அடிமைகள் இருக்கிறார்கள். ஒருவர் தர்மயுத்தம் செய்த அடிமை; இன்னொருவர் தவழ்ந்து தவழ்ந்து சென்ற அடிமை.  இந்த இரு அடிமைகளையும் கட்டுப்படுத்த டெல்லியில் மோடி இருக்கிறார். கடந்த மூன்று மாதங்களாக டெல்லியில் அமைதியாகப் போராட்டம் நடைபெற்றது. பா.ஜ.கவினரின் வன்முறையைத் தூண்டும் பேச்சால்தான் வன்முறை வெடித்தது. வன்முறையில் 50 பேர் இறந்திருக்கிறார்கள். டெல்லியிலேயே உள்ள பிரதமர் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவில்லை. தமிழகத்தில் அடிமை அரசையும், டெல்லி பாசிச அரசையும் அடுத்த முறை வீட்டுக்கு அனுப்புவோம்” என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

click me!